நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 289

முல்லை


பிரிவிடைப் பருவம் கண்டு சொல்லியது.

அம்ம வாழி, தோழி! - காதலர்,
நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய
சொல் புடைபெயர்தலோ இலரே; வானம்
நளி கடல் முகந்து, செறிதக இருளி,
கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி, . . . . [05]

கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை,
கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய
பெரு மர ஒடியல் போல,
அருள் இலேன் அம்ம; அளியேன் யானே.
- மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்.

பொருளுரை:

தோழீ! வாழி! யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக! இந்நிலம் தன் நிலையினின்று பெயர்வதாயிருந்தாலும் நம் காதலர் தாங்கூறிய சொல்லை அதனிலைமையினின்றும் பெயர்த்துக் கூறுபவரல்லர்; ஆதலின் குறித்த பருவத்து வருவர் அதன்முன் மேகமானது நெருங்கிய கடனீரை முகந்து செறிவு பொருந்த இருண்டு மிக்க மழையைப் பெய்து; கடிய குரலைக் காட்டி இடித்துக் கார்காலத்தைச் செய்து துன்புறுத்துதற்கு என்மாட்டு அமைந்திராநின்றது; இப்பொழுது அளிக்கத்தக்க தகுதியுடையேனாகிய யான்; அங்கே கொல்லையில் கோவலர்கள் இரவில் எரி கொளுத்திய வெட்டுண்ட பெரு மரத்தினது வேரடிக் கட்டையைப் போலக் காமநோய் கனற்றலானே அவரான் அருள் செய்யப் பெறேனாயிராநின்றேன்.