நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 286
பாலை
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.
'ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன,
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர்மன்ற; செலீஇயர் என் உயிர்' என,
புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து . . . . [05]
இனைதல் ஆன்றிசின் - ஆயிழை! - நினையின்
நட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ - தோழி! - அவர் சென்ற திறமே?
அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி
கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்
சென்றோர்மன்ற; செலீஇயர் என் உயிர்' என,
புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்து . . . . [05]
இனைதல் ஆன்றிசின் - ஆயிழை! - நினையின்
நட்டோர் ஆக்கம் வேண்டியும், ஒட்டிய
நின் தோள் அணி பெற வரற்கும்
அன்றோ - தோழி! - அவர் சென்ற திறமே?
- துறைக்குறுமாவிற் பாலங் கொற்றனார்.
பொருளுரை:
ஆராய்ந்தணிந்த இழையையுடையாய்! தோழீ, உடைமரங்கள் மிக்க நெறியின்கண்ணே மகளிரின் ஒள்ளிய குண்டலத்திற்கொளுவிய ஊசல் போன்ற மலை நெறியிலுள்ள குமிழ மரத்தின் அழகிய இதழையுடைய மலர் கல்லென்னும் ஒலியோடு கோலஞ்செய்தாற்போல உதிராநிற்கும்; பொலிவழிந்த குன்றத்து எங்காதலர் சென்றனர் ஆதலால் திண்ணமாக இனி என்னுயிர் சென்றொழிவதாக என்று; நீ அணிந்த கலன்கள் கழன்று விழும்படி விம்மியழுது மிகநொந்து வருந்துகின்றதனைச் சிறிது பொறுப்பாயாக!; கருதுங்காலைத் தம்மை நட்புக் கொண்டவர் தாம் செல்வமடைய வேண்டியதற்காகவும் அடைக்கலமாகப் புகுந்த நின்னுடைய தோள்கள் நல்ல கலன்களை அணியப் பெறுவதற்காகவும் அன்றோ; அவர் சென்ற தன்மையாகும்.