நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 283

நெய்தல்


பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; கடிநகர் புக்க தோழி பிற்றை ஞான்று, 'வேறுபடாது ஆற்றினாய்' என்று சொல்லியதூஉம் ஆம்.

ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற
கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்
அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய,
இன்னை ஆகுதல் தகுமோ - ஓங்கு திரை . . . . [05]

முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி,
ஏமுற விளங்கிய சுடரினும்,
வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே?
- மதுரை மருதன் இளநாகனார்.

பொருளுரை:

ஒள்ளிய நெற்றியையுடைய நுளைச்சியர் அகன்ற கழியின்கண்ணே பறித்துவந்த மகளிர் கண்ணை நேராக ஒத்தலையுடைய மணங்கமழ்கின்ற நறிய நெய்தன் மலர்; அகன்ற கையாலே கோலஞ்செய்த சிறிய மனையை அலங்கரிக்குந் துறையையுடைய தலைவனே! உயர்ந்து வரும் அலையையுடைய கடலின்மீது பலருந் தொழுமாறு தோன்றி யாவரும் மகிழ விளங்கிய ஞாயிற்றினுங் காட்டில் வாய்மை விளங்கிய; நினது சொல்லை விரும்பிய எம்மிடத்துள்ள; அறிவுடையோரால் ஆராய்ந்து கண்ட பழைய அழகு கெடும்படியாக; நீ இத் தன்மையை உடையையாயிருத்தல் தகுதியுடையதொரு காரியமாகுமோ? ஆதலின் ஆராய்ந்து ஒன்றனைச் செய்வாயாக!