நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 263
நெய்தல்
சிறைப்புறமாகத் தோழி தலைமகனை வரைவு கடாயது.
பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்
இறை வரை நில்லா வளையும், மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு
உரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு,
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது, . . . . [05]
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு,
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம் புலம்பற் கண்டு, நிலைசெல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு,
உரைத்த - தோழி! - உண்கண் நீரே. . . . . [10]
இறை வரை நில்லா வளையும், மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு
உரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு,
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது, . . . . [05]
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு,
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம் புலம்பற் கண்டு, நிலைசெல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு,
உரைத்த - தோழி! - உண்கண் நீரே. . . . . [10]
- இளவெயினனார்.
பொருளுரை:
தோழீ! பிறைபோன்ற அழகெல்லாம் இழந்த நினது நெற்றியையும் முன்கையளவினில்லாது கழலும் வளையையும்; மறைந்தேனுங் கூறாது நேராக வந்து ஊரார் அலர் தூற்றும் பழிச்சொல்லையும்; சொல்லவேண்டிய நங்காதலனுக்கு நாம் நாணமேலீட்டினால் சொல்லாதொழிந்தோ மெனினும்; இரையை விரும்பி நிறைந்த சூலுடைமையின் இயங்கமாட்டா வருத்தத்தினாலே நெய்தனிலத்தின் கண்ணதாகிய கழியை அடையாமல் மருதநிலத்தின் கண்ணதாகிய கழனியிலே தங்கியிருந்த வளைந்த வாயையுடைய பேடைநாரைக்கு, முடம் முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் முடம் முதிர்ந்த நாரைப் போத்துக் கடலின் மீனைக் கொண்டுபோய்க் கொடாநிற்கும்; மெல்லிய கடற்கரைத் தலைவனைக் கண்டு; பலகால் நாம் மறைக்கவும் மறைக்கவும் நிலைகொள்ளாமல் அளவு கடந்து; மையுண்ட நம்முடைய கண்களின் நீரே வெளிவந்து உரை செய்துவிட்டன; யாம் யாது செய்யவல்லேம்!