நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 262
பாலை
தலைமகள் ஆற்றாக் குறிப்பு அறிந்து, பிரிவிடை விலக்கியது.
தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்,
ஆடு மயிற் பீலியின் வாடையொடு துயல்வர,
உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து,
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்,
துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும் . . . . [05]
பணைத் தோள், அரும்பிய சுணங்கின், கணைக் கால்,
குவளை நாறும் கூந்தல், தேமொழி
இவளின் தீர்ந்தும், ஆள்வினை வலிப்ப,
'பிரிவல்' நெஞ்சு, என்னும்ஆயின்,
அரிது மன்றம்ம, இன்மையது இளிவே. . . . . [10]
ஆடு மயிற் பீலியின் வாடையொடு துயல்வர,
உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து,
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்,
துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும் . . . . [05]
பணைத் தோள், அரும்பிய சுணங்கின், கணைக் கால்,
குவளை நாறும் கூந்தல், தேமொழி
இவளின் தீர்ந்தும், ஆள்வினை வலிப்ப,
'பிரிவல்' நெஞ்சு, என்னும்ஆயின்,
அரிது மன்றம்ம, இன்மையது இளிவே. . . . . [10]
- பெருந்தலைச் சாத்தனார்.
பொருளுரை:
ஈரிய புனத்திலுள்ள கருங்காக்கணத்தின் கண்போன்ற கரிய மலர; வாடைக்காற்று வீசுதலானே கூத்தாடுகின்ற மயிலின் பீலிபோல ஆடாநிற்ப; விடாது மழைத்தூவல் பொருந்திய ஊர் முழுதும் உறங்கும் நடுயாமத்து; நடுங்குகின்ற காமநோய் வருத்தஞ் செய்தலாலே நல்ல அழகு குறைந்து; துன்பமிக்க மனத்தளாய்த் தன்னை முனிந்தொறுக்கும் காமநோயால் உழக்(கப்படு)கின்ற; பருத்த தோளையும் வெளிப்படத் தோன்றிய தேமலையும் திரண்ட தண்டையுடைய குவளைமலர் மணம் வீசுங்கூந்தலையும் இனிய சொல்லையுமுடைய இவளை; கைவிட்டும் பொருளின் முயற்சி என்னெஞ்சினை இழுத்தலால்; என்னெஞ்சு 'யான் இவளைப் பிரிகிற்பேன்' என்று கூறாநிற்கும்; அங்ஙனம் கூறுமானால் வறுமையான் வரும் இளிவரவு அம்ம திண்ணமாக மிகக் கொடியதேயாம்.