நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 246

பாலை


பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறீஇயது.

இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்;
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, . . . . [05]

செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர்,
வருவர் வாழி - தோழி! - புறவின்
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ,
இன் இசை வானம் இரங்கும்; அவர்,
'வருதும்' என்ற பருவமோ இதுவே? . . . . [10]
- காப்பியஞ் சேந்தனார்.

பொருளுரை:

தோழீ! வாழி! நாம் கருதியதன் இடையிட்டு உவ்விடத்தே இனிய நிமித்தம் உண்டாகாநின்றன; நெடிய சுவரின்கணுள்ள பல்லியும் நம்பக்கத்திருந்து நம்மைத் தெளிவியாநின்றது; மனையகத்துள்ள பெரிய நொச்சிவேலியிலுயர்ந்த மாமரத்தின் கிளையிலிருந்து இனிமை பயப்பக் கூவுந்தொழிலிலே கை போதலான் மாட்சிமைப்பட்ட கரிய குயில் கூவுதலையுஞ் செய்யாநிற்கும்; நந்தலைவர் வலிமைமிக்க உள்ளத்துடனே பலவாய சுரத்தைக் கடந்து ஈட்டப்படும் பொருட்காக அகன்றனராயினும்; தாம் குறித்த பருவத்திலே பொய்யாராய் வருவர்காண்! கானத்துப் பொன் போலும் மலரையுடைய கொன்றையுடனே பிடாவும் மலராநிற்ப; இனிய குரலையுடைய மேகம் முழங்காநிற்குமாதலால்; அவர் வருவே மென்ற பருவம் இதுதான் போலும்;