நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 229
பாலை
தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.
'சென்மின்' என்றல் யான் அஞ்சுவலே;
'செல்லாதீம்' எனச் செப்பின், பல்லோர்
நிறத்து எறி புன் சொலின்திறத்து அஞ்சுவலே;
அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு, . . . . [05]
அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து,
இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி,
உழையீராகவும் பனிப்போள் தமியே
குழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென,
ஆடிய இள மழைப் பின்றை, . . . . [10]
வாடையும் கண்டிரோ, வந்து நின்றதுவே?
பொருளுரை:
'நாம் வினைவயிற் செல்வோம் நாம் வினைவயிற் செல்வோம் என்று நீர் பலகாலும் கூறுதலாலே யான் பலவாகப் புலந்து கூறிச் செல்லுவீராக' என்று சொல்லுதற்கு அஞ்சாநிற்பேன்; 'நீர் செல்லாது இங்கே இருமின்' என்று சொன்னால் பலருங் கூறும் மார்பிலே தைக்கின்ற அம்பு போன்ற புல்லிய சொல்லினிமித்தமாக எங்கே பழிவந்து மூடுமோ என்று அதற்கும் நான் அஞ்சாநிற்பேன்; ஆதலால் நீர் செல்லுவீராக! சென்று வினை முடிப்பீராக! அங்ஙனம் முடிக்கச் சென்ற அவ்விடத்து நெடுங்காலம் நிற்றலை ஒழியுமாற்றைப் பாதுகாத்துக் கொள்வீராக! இரவு நடுயாமத்துக் கலன் அணிந்த மார்பிலே தழும்பு கொள்ளுமாறு முயங்கி நீயிர் அருகிருப்பீராயினும் இவள் நடுங்காநிற்பள் கண்டீர்! அத்தகையாள் இப்பொழுது தனியேயிருந்து வருந்துமாறு அகன்ற இடமெங்கும் பரவி நெருங்கித் தண் எனும்படி இயங்குகின்ற பெய்து வெளிதாகிய மேகத்தின் பின்னர்; வந்துநின்ற வாடைக் காற்றையுங் கண்டீரன்றோ? ஆதலின் ஆராய்ந்து ஏற்றது செய்ம்மின்!