நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 227

நெய்தல்


வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, தோழி தலைமகனை வரைவு முடுகச் சொல்லியது.

அறிந்தோர் 'அறன் இலர்' என்றலின், சிறந்த
இன் உயிர் கழியினும் நனி இன்னாதே;
புன்னைஅம் கானல் புணர் குறி வாய்த்த
பின் ஈர் ஓதி என் தோழிக்கு, அன்னோ!
படு மணி யானைப் பசும்பூட் சோழர் . . . . [05]

கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்,
கள்ளுடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத்
தேர் வழங்கு தெருவின் அன்ன,
கௌவை ஆகின்றது - ஐய! - நின் அருளே.
- தேவனார்.

பொருளுரை:

ஐயனே! புன்னையஞ் சோலையிடத்தும் புணர்தற்குப் பலகாலும் நீ குறித்த குறிவயின் வந்துநின்ற பின்னிய குளிர்ந்த கூந்தலையுடைய என் தோழிக்கு; ஐயோ! நீ செய்த தலையளிதான் ஒலிக்கின்ற மணியையுடைய யானையையும் பசிய பொன்னாலாகிய பூண்களையுமுடைய சோழரது; கொடி நுடங்கா நின்ற தெருக்களையுடைய ஆர்க்காடு என்னும் பதியிலே; கள்ளையுடைய சாடியின்கண் வண்டுகள் ஒலித்து; நீங்காத தேர்கள் இயங்கும் தெருவையொத்த பெரிய பூசலுண்டாகா நின்றது. அப் பூசலாகிய பழிச் சொல்லும் எப்படிக் கூறப்படுகின்றதோ வெனில்; அறிந்தோம் என்று கூறிக்கொள்ளும் அவரெல்லாம் அறநெறியிலே நிற்பவரேயல்லர் என்று எவ்விடத்தும் பரந்தோங்கின; அவ்வலர்தான் அவளது இனிய உயிர் இறந்துபட்ட பின்னும் இன்னாமையைத் தருகின்ற தன்மையுடையது காண்!