நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 195

நெய்தல்


களவின்கண் நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது.

அருளாயாகலோ, கொடிதே!- இருங் கழிக்
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி,
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்
மெல்லம் புலம்ப! யான் கண்டிசினே-
கல்லென் புள்ளின் கானல்அம் தொண்டி, . . . . [05]

நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்றென,
பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீர் அலைத் தோற்றம் போல,
ஈரிய கலுழும், நீ நயந்தோள் கண்ணே.
- ஆசிரியர் அறியப்படவில்லை.

பொருளுரை:

கரிய கழியின் கணுள்ள நீர்நாயின் குருளை; கொழுவிய மீன்களைப் பிடித்துத் தின்று தில்லை மரப் பொந்துகளிலே பள்ளிகொள்ளா நிற்கும்; மெல்லிய கடற்கரையின் தலைவனே!; கல்லென ஒலிக்கின்ற புள்ளினங்களையுடைய கடற்கரைச் சோலை சூழ்ந்த தொண்டியின் கண்ணதாகிய வயலிலே; நெற்கதிர் அறுக்கும் உழவரினுடைய கூரிய அரிவாளால் அறுபட்டதனாலே; பல இதழ்கள் விளங்கிய குவியாத நெய்தன் மலர்; நீரில் முங்கி அலைகின்ற தோற்றத்தைப்போல; நீ விரும்பிய காதலியின் கண்கள் ஈரியவாய்க் கலுழாநிற்கும்; அதனை யான் கண்டிருக்கின்றேன்; ஆதலின் நீயும் அவள் கலுழாதிருக்குமாறு வரைந்தருள செய்கின்றாயில்லை; இங்ஙனம் அருளாதிருப்பது ஓஒ கொடிதுகாண்!