நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 182
குறிஞ்சி
வரைவு நீட்டிப்ப, தலைமகள் ஆற்றாமை அறிந்த தோழி சிறைப்புறமாகச் சொல்லி வரைவு கடாயது.
நிலவும் மறைந்தன்று; இருளும் பட்டன்று;
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்,
பாவை அன்ன நிற் புறங்காக்கும்
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்;
கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு, . . . . [05]
நன் மார்பு அடைய முயங்கி, மென்மெல,
கண்டனம் வருகம் சென்மோ?- தோழி!-
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறுந் தலைப் பெருங் களிறு போல,
தமியன் வந்தோன், பனியலை நீயே! . . . . [10]
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்,
பாவை அன்ன நிற் புறங்காக்கும்
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்;
கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டாங்கு, . . . . [05]
நன் மார்பு அடைய முயங்கி, மென்மெல,
கண்டனம் வருகம் சென்மோ?- தோழி!-
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறுந் தலைப் பெருங் களிறு போல,
தமியன் வந்தோன், பனியலை நீயே! . . . . [10]
- ஆசிரியர் அறியப்படவில்லை.
பொருளுரை:
தோழீ! நிலாவும் மறைந்தொழிந்தது, இருளும் வந்து பொருந்தியது; சித்திரத்திலமைந்தாலொத்த அகன்ற இடத்தையுடைய வீட்டின் எல்லையிலே பாவைபோன்ற நம்மைப் பாதுகாக்கின்ற; சிறந்த மேம்பாட்டினையுடைய அன்னையுந் துயிலா நின்றனள்; தறியிலே பிணித்துக் காப்பவரும் மீதேறி நடத்துபவரு மொழிந்த சிறிய தலையையுடைய பெரிய களிற்றுயானைபோல; தனியாக வந்த தலைவனது பனியலைத்தலானே கலக்குண்ட நிலையைச் சென்று நோக்கி; கையிலிருந்து தவறுண்டு விழுந்து இழந்து போகிய நல்ல அணிகலனை மீட்டும் கண்டெடுத்தாற்போல நம்மை இற்செறித்தலான் அடையப்படாதிருந்த; அவனுடைய நல்ல மார்பைச் சேரப்புல்லி மகிழ்ந்திருந்து அவனைப் பலகாலும் செவ்விதாக நோக்கிப் பின்னர் மெல்ல மெல்ல வருவமோ? ஆராய்ந்து கூறுவாயாக!