நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 164
பாலை
பொருள் முடித்து வந்தான் என்பது, வாயில்கள்வாய்க் கேட்ட தோழி தலைவிக்குஉரைத்தது.
செங் கதிர்ச் செல்வன் தெறுதலின், மண் பக,
உலகு மிக வருந்தி உயாவுறுகாலைச்
சென்றனர் ஆயினும், நன்று செய்தனர்' எனச்
சொல்லின் தௌப்பவும், தௌதல் செல்லாய்- . . . . [05]
செங்கோல் வாளிக் கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்தென,
வெங் கடற்று அடை முதல் படு முடை தழீஇ,
உறு பசிக் குறு நரி குறுகல் செல்லாது
மாறு புறக்கொடுக்கும் அத்தம், . . . . [10]
ஊறு இலராகுதல் உள்ளாமாறே.
பொருளுரை:
தோழீ! மழைபெய்யாதொழிந்த பாலைநிலத்தின்கண் அந் நிலத்தின் தெய்வமாகிய ஆதித்தன் காய்தலானே; நிலம் பிளவுபட அதனால் உலகம் மிகவருந்தித்ன்புற்ற காலத்து; தலைவர் பொருள்வயிற் பிரிந்து அந்நிலத்துள்ள நெறியின்கண்ணே சென்றனராயினும் அவர் பொருள்மேற் சென்றாராதலின்; நல்லதொரு காரியத்தையே செய்தனரென்று என்னுடைய சொற்களால் நின்னைத் தெளிவித்தகாலையும்; வளைந்த வில்லையுடைய ஆறலைகள்வர் செம்மையுற்ற கோல்வடிவாகிய அம்பினாலே நெறியின்கண்ணே செல்லும் ஏதிலாளரைக் கொன்று உயிரைப் போக்கினமையாலே; இறந்து கிடந்த பிணங்கள் கொடிய மலைநெறியின் மருங்கே இலைகளால் மூடப்பட்டு முடைநாற்ற மிகுதலும்; அவற்றைத் தின்ன வந்த மிக்க பசியையுடைய குறிய நரி அம் முடை நாற்றம் பொறாமையால் அவ்விடத்து நெருங்காது பின்னே மீண்டு செல்லாநிற்கும்; சுரத்தின்கண் யாதுமோர் ஊறுபாடிலராய் வருதலை நினையாமையாலே நீ; யான் கூறிய வார்த்தைகளினாலே தெளிவடைந்தாயில்லை; அவ்வண்ணம் நீ வருந்தியிருப்பது அறிந்தனர் போலும், அவர் குறித்த இப் பருவத்து இற்றைநாளால் இங்கு வந்தனர்காண்;