நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 160
குறிஞ்சி
கழற்று எதிர்மறை.
பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும்,
நும்மினும் அறிகுவென்மன்னே- கம்மென
எதிர்த்த தித்தி, ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின், . . . . [05]
ஐம் பால் வகுத்த கூந்தல், செம் பொறி
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி,
முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே. . . . . [10]
பொருளுரை:
மேன்மேலே தோன்றிய தித்தியையும் எழுச்சியையுடைய இளைய அழகிய கொங்கையின்மேலே அள்ளித் தெளித்தாற் போன்ற அழகிய நுண்ணிய தேமலையும்; ஐம் பகுதியாகப் பகுக்கப்பட்ட சிவந்த விளங்கிய நெற்றிமேலே பொலிவு பெற்ற தேன்பரவிய கூந்தலாகிய ஓதியையும் உடைய இவளுடைய; நாட்பட்ட நீர் பொருந்திய பொய்கையிலே மலர்ந்த குவளை மலரை ஒன்றோடொன்று எதிர்எதிர் வைத்துத் தொடுத்தாற் போன்ற செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்ணையும் யான் காண்பதன்முன் உவ்விடத்தே; யாருடனும் விளங்கின கலந்த உறவையும், நண்பும் சுற்றந் தழுவலும் பகைவரை வசித்தலுமாகிய இரு வகை நட்பையும்; தன்னோடொவ்வாத தாழ்ந்தார்மாட்டு ஒன்றும் இரவாதவாறு பெற்ற நாணம் நன்றாகவுடைமையையும்; பிறர் இரந்தவழி நன்னெறியிலே கரவாமலீயும் கொடையையும்; தீயசெயல் கண்டவிடத்து அச் செயலில் உள்ளஞ் செல்லாதவாறு மீட்டு நன்னெறிக்கண்ணே நிறுத்தும் பண்பையும்; உலகவொழுக்கமறிந்து ஒழுகுவதனையும்; நும்மினுங்காட்டில் ஆராய்ந்து அவற்றை யானுடையனாகியிருந்தேன்; இப்பொழுது இவள் கண்ணை நோக்கிய வழி அவை யாவும் என்மாட்டு அவ்வண்ணம் இல்லையாகிக் கழிந்து வேறு வண்ணமாயுண்டாயின; இங்ஙனம் வேறுவகை எய்தியபின் நீ இரங்கியாவதென்னை கொலாம்;