நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 159
நெய்தல்
தலைவியின் ஆற்றாமையும் உலகியலும் கூறி, வரைவு கடாயது.
உரவுத் திரை கொழீஇய பூ மலி பெருந் துறை,
நிலவுக் குவித்தன்ன மோட்டு மணல் இடிகரை,
கோடு துணர்ந்தன்ன குருகு ஒழுக்கு எண்ணி,
எல்லை கழிப்பினம்ஆயின், மெல்ல . . . . [05]
வளி சீத்து வரித்த புன்னை முன்றில்,
கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய,
'எழு' எனின், அவளும் ஒல்லாள்; யாமும்,
'ஒழி' என அல்லம் ஆயினம்; யாமத்து,
உடைதிரை ஒலியின் துஞ்சும் மலி கடற் . . . . [10]
சில் குடிப் பாக்கம் கல்லென
அல்குவதாக, நீ அமர்ந்த தேரே!
பொருளுரை:
நீலமணி களங்கமறத் தெளிந்திருந்தாற்போன்ற கரிய பெரிய கடனீர்ப் பரப்பின் வலிய அலையோங்கி மோதுகின்ற; புன்னை மலர் மிக்க பெரிய துறையின் கண்ணே நிலவைக் குவித்து வைத்தாற் போன்ற உயர்ச்சியையுடைய மணன்மேடு இடிந்து சரிந்த கரையின்கண்ணே நின்று; சங்குகளைக் குலையாகத் தொடுத்தாற் போன்ற குருகுகளின் வரிசையை எண்ணிப் பகற்பொழுதை நின்னொடு போக்குவேமாயின்; மெல்லக் காற்றடித்துப் பெருக்கிக் கோலஞ் செய்த புன்னைமரம் பொருந்திய வாயிலையுடைய; கொழுவிய மீனுணவையுடைய வளப்பமிக்க மனையத்துச் செல்லும்பொருட்டு நீ எழுந்துவருவாயாக! என்றால்; அதற்கு அவள் உடன்படுவாளல்லள்; யாமும் அத்தலைவியை நோக்கி நீ கொண்ட உள்ளக் கருத்தை ஒழிப்பாயாக! என்று கூறும் தகுதிப்பாடுடையேமல்லேம்; சேர்ப்பனே! நடுயாமத்து முரிந்து விழுகின்ற அலையின் ஒலியைக் கேட்டும் துயிலாநின்ற நிரம்பிய கடற்கரையின் கண்ணதாகிய சிலவாகிய குடியிருப்புக்களையுடைய எம்மூரில்; யாவரும் எதிர்கொள்ளும் மகிழ்ச்சியாலே கல்லென்னும் ஒலியுண்டாம்படி நீ விரும்பிய தேர் தங்குவதாக!