நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 157
பாலை
பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது.
இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப்
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து,
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில்,
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும், . . . . [05]
நம்வயின் நினையும் நெஞ்சமொடு, கைம்மிகக்
கேட்டொறும் கலுழுமால் பெரிதே- காட்ட
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை
அம் பூந் தாது உக்கன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே. . . . . [10]
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து,
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில்,
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும், . . . . [05]
நம்வயின் நினையும் நெஞ்சமொடு, கைம்மிகக்
கேட்டொறும் கலுழுமால் பெரிதே- காட்ட
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை
அம் பூந் தாது உக்கன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே. . . . . [10]
- இள வேட்டனார்.
பொருளுரை:
பெரிய இடமகன்ற இவ்வுலகின்கண் உயிர்களுக்குரிய நெருங்கிய தொழிலைக் கொடுத்துப் பெருமழை பெய்துவிட்ட பிற்றைநாட் காலையிலே; பல புள்ளிகளமைந்த பாம்பு ஓடும்போது அதன் முதுகு நெளியுமாறு போல யாற்றுநீர் நுணுகியோடா நின்ற செவ்வி அமைந்த இளவேனிற் பருவத்திலே; பூங்கொத்துக்கள் நிரம்பிய மாமரத்தின்கண்ணவாகிய பெடையொடு புணர்கின்ற குயில் கூவும்பொழுதெல்லாம்; காட்டின் கணுள்ள சிறிய மலையின்பக்கத்தவாகிய நீண்ட அடியையுடைய வேங்கை மரத்தின் அழகிய பூந்தாது உதிர்ந்தாற்போன்ற; நுண்ணிய பலவாய சுணங்கு பரந்த மாமைநிறத்தையுடையாள்; நம்பால் நினைந்து விடுத்த நெஞ்சுடனே அக்குயில் ஒன்றனையொன்று அழைக்கின்ற ஓசையைக் கேட்டுகுந்தோறும் காமமானது தன்வரம்பு கடந்து மிக அதனாலே பெரிதும் அழுது துன்பமுழவாநிற்குமே!