நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 150
மருதம்
தலைநின்று ஒழுகப்படா நின்ற பரத்தை தலைவனை நெருங்கிப் பாணற்கு உரைத்தது.
'மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி,
அரண் பல கடந்த முரண் கொள் தானை
வழுதி, வாழிய பல! எனத் தொழுது, ஈண்டு
மன் எயில் உடையோர் போல, அஃது யாம் . . . . [05]
என்னதும் பரியலோ இலம்' எனத் தண் நடைக்
கலி மா கடைஇ வந்து, எம் சேரித்
தாரும் கண்ணியும் காட்டி, ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்ச,
கண்ணுடைச் சிறு கோல் பற்றிக் . . . . [10]
கதம் பெரிது உடையள், யாய்; அழுங்கலோ இலளே.
பொருளுரை:
பாணனே! நும் பெருமகனாவான் பலராலும் நகுதற்படுதலை நன்றாகவுடையனாயிராநின்றான; 'காவலரண் சிதையும்படி பலவாய யானைப் படைகளைப் பரக்கவிட்டுச் சென்று பலபல அரணங்களை வென்று கொண்ட வலிமைமிக்க சேனைகளையுடைய பாண்டியன் மாறன் வழுதி பன்னெடு நாள் வாழ்வானாக!' என்று வணங்கி; அடைகின்ற நிலைபெற்ற மதில்களையுடைய குறுநில மன்னர்களைப்போல அதற்காக யாம் சிறிதேனும் வருந்துதலைச் செய்யோம் என்று கூறி; மென்மையான நடையையுடைய கனைக்கின்ற குதிரையைச் செலுத்தி எமது சேரியின்கண் வந்து; கொண்டை மாலையையும் அழகுக் கிடுங் கண்ணியையுங் காட்டி; ஒருமைப்பாட்டையுடைய எமது நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டமை இனி விடுவதமையுமோ? அமையாது காண்!; நீ அஞ்சுமாறு எம் அன்னை நெருங்கிய கணுக்களையுடைய சிறிய மூங்கிற்கோலைக் கையிலேந்தி வெகுளி பெரிதும் உடையளாயிராநின்றாள்; சிறிதும் வருந்துகிலள், அவளால் ஒறுக்கப்படுவதுண்டு போலும்; ஆதலின் நீ இங்கே வாராதே கொள்!;