நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 142
முல்லை
வினை முற்றி மீளும்தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது.
பாணி கொண்ட பல் கால் மெல் உறி
ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி,
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப, . . . . [05]
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி
சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே- பொய்யா யாணர்,
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்,
முல்லை சான்ற கற்பின், . . . . [10]
மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே.
பொருளுரை:
இராப்பொழுதாயிருப்பினும் வந்த விருந்தைக் கண்டு மகிழா நிற்கும் யான் கூறிய சொற்பிழையாதபடி இல்லிலிருந்து நல்லறஞ் செய்யும் கற்பினையும்; மென்மையாகிய சாயலையும் உடைய இளைய மாறாத நங் காதலி உறைகின்ற பொய்யாத புது வருவாயினையுடைய ஊரானது; மழை காலிறங்கிப் பொழிந்த விளங்கிய பெயலின் இறுதி நாளிலே; கையிற் கொண்ட பலவாகிய காலிட்டுப் பின்னிய மெல்லிய உறியுடனே தீக்கடைகோல் முதலாய கருவிகளை இட்டு வைத்த தோற்பையை ஒருசேரச் சுருக்கிக்கட்டி; பனையோலைப் பாயோடு முதுகிற் கட்டியிட்ட பால் விலைகூறி ஏகும் இடையன்; நுண்ணிய பலவாய மழைத்துளி தன்னுடம்பிலொருபுறம் நனைத்தலைச் செய்யக் கையின் சோலையின்றி அதன்மேல் ஒருகாலை வைத்த ஒடுங்கிய நிலையோடு நின்று வாயைக் குவித்து ஊதும் 'வீளை' எனப்படுகிற அழைத்தலாகிய குறிப்பொலியை அறிந்து; சிறிய தலையையுடைய யாட்டின் தொகுதி பிறபுலம் புகுதாது மயங்கி அவ்வண்ணமே தங்காநிற்கும் ஈண்டுள்ள புறவின் கண்ணதாயிரா நின்றது; ஆதலின் நமது தேர் விரைந்து செல்லின் அவளை இன்னே மகிழ்ந்து முயங்கலாகும்;