நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 134
குறிஞ்சி
'இற்செறிப்பார்' என ஆற்றாளாய தலைவியை, அஃது இலர் என்பது பட, தோழி சொல்லியது.
இதுகொல்?- வாழி, தோழி!- காதலர்
வரு குறி செய்த வரையகச் சிறு தினைச்
செவ் வாய்ப் பாசினம் கடீஇயர், 'கொடிச்சி!
அவ் வாய்த் தட்டையொடு அவணை ஆக!' என, . . . . [05]
ஏயள்மன் யாயும்; நுந்தை, 'வாழியர்,
அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள்!
செல்லாயோ; நின் முள் எயிறு உண்கு' என,
மெல்லிய இனிய கூறலின், யான் அஃது
ஒல்லேன் போல உரையாடுவலே! . . . . [10]
பொருளுரை:
தோழீ! வாழ்வாயாக!; நம் காதலர் வருதற்குக் குறி செய்த மலையிடத்துள்ள சிறிய தினைப்புனத்தே விழுகின்ற சிவந்த வாயையுடைய பசுங்கிளியின் கூட்டங்களை ஓட்டும் பொருட்டு; என்னை நோக்கிக் "கொடிச்சீ! நீ அழகமைந்த கிளிகடி கருவியாகிய தட்டையைக் கைக்கொண்டு அத் தினைப் புனத்துக்குச் செல்வாயாக!" என்று அன்னையும் பல முறை மிகுதியாக ஏவினள்; அன்றியம் நுந்தை என்னைக் கூவி 'அழகிய மாந்தளிர் போன்ற மேனியையும் நிரைத்த வளையையும் உடைய இளமடந்தாய்!; 'நீ புனத்தின்கண்ணே சென்றிலையோ? விரைவிலே சென்று காண்! நின் முள் எயிற்றை முத்தங்கொள்வல்', என்று; மெல்லியவாகிய இனிய வார்த்தை கூறுதலினால்; யான் இன்னும் பலகால் நம்மை வேண்டி அவர்களே புனத்தின்கண்ணே கொண்டு சென்று காவலின் உய்க்குமாறு கருதி அங்ஙனம் காவலுக்குச் செல்லமாட்டேன் போலச் சில வார்த்தையாடுவே னாயினேன்; ஆதலின் இனித் தினைக்கொல்லையிலே சென்று காதலனைக் கூடியிருப்பாம் என்பதற்கு அறிகுறி இதுதானோ! இங்ஙனம் நிகழ்ந்த இஃது இனிய வொரு பொருளினுங்காட்டில் இனியதாயிராநின்றது;