நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 109
பாலை
பிரிவிடை ஆற்றாளாய தலைமளது நிலைகண்ட தோழிக்குத் தலைமகள்சொல்லியது.
காதலர் அகன்றென, கலங்கிப் பேதுற்று,
'அன்னவோ, இந் நன்னுதல் நிலை?' என,
வினவல் ஆனாப் புனையிழை! கேள், இனி
உரைக்கல் ஆகா எவ்வம்; இம்மென . . . . [05]
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்,
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து,
உச்சிக் கட்டிய கூழை ஆவின்
நிலை என, ஒருவேன் ஆகி
உலமர, கழியும், இப் பகல் மடி பொழுதே! . . . . [10]
பொருளுரை:
'நின்னைப் பிரியேமாகி எப்பொழுதும் ஒன்றியிருத்தும்' என்று கூறிய பழைமையாகிய நட்பினின்றும் காதலர் பிரிந்தகன்றதனாலே கலங்கி மயங்குற்று; இந்நல்ல நுதலையுடையாளுடைய நிலைமை அப்படிப்பட்டனவோ? என்று வினாவுதல் ஒழியாத அலங்கரித்த அணிகலனையுடையாய் யான் கூறுகின்றதனைக் கேட்பாயாக! இனி உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென இப்பொழுது கூறுதற்கியலாத துன்பம் விரைந்துபற்ற; ஒலிக்கும் வாடை வீசுதலையுடைய ஆதித்த மண்டிலம் மேற்கே மறைகின்ற இம் மாலைகாலமானது; இருண் மிக்க இராப்பொழுதிலே சேற்றையுடைய தொழுவத்தினின்று வேற்றிடத்திலே கட்டவேண்டு மற்றத்து அங்ஙனஞ் செய்யாது அத்தொழுவத்துள் கீழினும் படுக்கவிடாது நின்ற நிலையிலே நிற்குமாறு தலைக்கயிற்றை யிழுத்து உச்சியிலே தூக்கி மேற்கை மரத்தில் இறுகப்பிணித்த குறுமையாகிய பசுவினது நிலைமையைப் போல; யான் ஒருத்தியாகியே நின்று உள்ளஞ் சுழன்று வருந்தும் வண்ணம் மெல்ல மெல்ல நீங்கா நிற்கும்; இவ்வேளை யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேனென்று புலம்புவ தன்றி வேறில்லைக்காண்;