நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 098

குறிஞ்சி


இரவுக்குறி வந்து ஒழுகும்தலைவனைத் தோழி வரைவு கடாயது.

எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
>செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில், தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, . . . . [05]

மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே- . . . . [10]

வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!
- உக்கிரப் பெருவழுதி.

பொருளுரை:

முள்ளம் பன்றியின் முட்போன்ற பருத்த மயிரையுடைய பிடரும் சிறிய கண்ணும் வயலிற் சென்றுண்ணும் விருப்பமுமுடைய பன்றி; உயர்ந்த மலையிடத்துள்ள இடமகன்ற தினைக் கொல்லையிலே சென்று மேயும் பொருட்டுப் பெரிய இயந்திரமமைந்த புழைவழியிலே சென்று புகும்பொழுது; தாழாது விரைந்து நல்ல பக்கத்திலிருந்து பல்லியடித்தலும் அதனை அறிந்து ஆங்குச் சென்றால் ஊறு நிகழும் என்று அஞ்சி; மெல்ல மெல்லப் பின்னே மீண்டுவந்து தன் கல்முழையிலுள்ள பள்ளியிடத்தே தங்காநிற்கும்; மலைநாடனே ! எந்தையாலே பாதுகாக்கப்படுகின்ற காவலையுடைய அகன்ற மாளிகையிடத்துத் துஞ்சாமற் காக்குங் காவலர்தாம் சிறிது அயர்ந்திருக்கும் பருவமறிந்து; நீ இரவின்கண் வந்து முயங்கிச் செல்லும் அதனினும் காட்டில் நாள்தோறும் நீ வரும் நெறியின் ஏதத்தைக் கருதுவதனாலே துயிலப் பெறாது என்கண்ணும் கொடிதாயிராநின்றது; அன்றியும் நின்பாற் சென்று வாராத என்பால் அன்பற்ற என்னெஞ்சமும் கொடிதாயிராநின்றது காண்!;