நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 093

குறிஞ்சி


வரைவு கடாயது.

'பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,
வரை வெள் அருவி மாலையின் இழிதர,
கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும்
மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!' எனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட! . . . . [05]

செல்கம்; எழுமோ; சிறக்க, நின் ஊழி!
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள்,
நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல் . . . . [10]

மயிர்க் கண் முரசினோரும் முன்
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே.
- மலையனார்.

பொருளுரை:

கிளைதொறுந் தேனிறால் தொடுத்தன தூங்காநிற்பப் பெரிய பழங்கள் குலைகுலையாகப் பழுக்க வரையின்கணுள்ள வெளிய அருவி மாலை போல இழிந்துவர; சாரலிலுள்ள கொல்லைகள்தோறும் வரகுசாமை முதலாகிய பதினறு வகைக் கூலமும் விதைக்கப்பட்டுப் பொலிய; நாட எக்காலத்தும் சிறுகுன்றுகள் பொருந்திய இவ்வெற்பு வளப்பமுடையதென்று அதனைவிட்டுப் பிரிந்துசெல்பவர் இரங்கா நிற்கும் பெரிய மலைநாடனே!; யாம் செல்லுகின்றோம் எழுந்து போவாயாக! நின் வாழ்நாள் நீடுவாழ்வதாக! மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத்தோள் நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள் பக்கங்கள் மறையப் பூண்ட திருந்திய கலன்களையுடைய முன்பு பருத்த தோளையும் நுணுகிய இடையையும் மெல்லிய சாயலையும் உடைய இவ்விளமகளுடைய; பூண் தாழ்ந்த கொங்கைகள் நாண் துன்புறுத்தலாலே வருத்தமுற்ற பழங்கண்கொண்ட பசலையையும் உடையன ஆதலால்; ஒலிக்கின்ற குரலையுடைய மயிர் சீவாத தோல் போர்த்த இடமகன்ற நின் மணமுரசொலி கேட்டலினாலே நம்மைக் காதலன் வரையவந்தனன் போலும் என்று கருதா நிற்கும் அந்நாள் அளவைக்குள்; இவளுக்கு உயிர் இருக்கும்படியான குறியைக் காணுதல் இனிப் பெறுதற்கரிய தொன்றாகுங்காண்;