நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 089

முல்லை


'பொருள் முற்றி மறுத்தந்தான்' எனக் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது.

கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர்,
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்,
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் . . . . [05]

அகல் இலை அகல வீசி, அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை,
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு,
இன்னும் வருமே- தோழி!- வாரா
வன்கணாளரோடு இயைந்த . . . . [10]

புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே!
- இளம் புல்லூர்க் காவிதி.

பொருளுரை:

தோழீ! கீழ்க்காற்றுச் செலுத்துகையினாலே ஆகாயத்திற் செறிவுற்று அலையிலுள்ள பிசிர்போல மலையினுச்சியை விருப்பத்தோடு ஏறி; ஒழுங்காக அமைந்து நிறைவுற்ற நிரம்பிய சூலையுடைய கரிய மேகம்; மிக்க மழையைப் பெய்தொழிந்த மழை அழிந்த கார்ப்பருவத்தின் இறுதியில்; மிக்க முன்பனிப் பருவத்தில் மயிர்கள் அமைந்த உழுந்தின் அகன்ற இலைகளெல்லாம் சிதையும்படி வீசி; நம்மை விட்டு நீங்காது நாள்தோறும் வருத்துகின்ற அன்பு செய்யாத வாடைக் காற்றானது; இதுகாறும் வாராதிருந்த வன்கண்மையுடைய தலைவரோடு ஒருபடியாயமைந்த துன்பத்தைச் செய்யும் மாலைப் பொழுதையும் வருத்தத்தையும் முற்பட விட்டுக்கொண்டு; பருமம் பூண்ட யானையானது தன் அயர்ச்சியாலே பெருமூச்சு விட்டாற்போல அவர் வந்த பிறகு இன்னும் வாராநிற்குமோ? அங்ஙனம் வந்தாலும் யாதொரு தீங்கையுஞ் செய்யாதுகாண்!;