நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 083
குறிஞ்சி
இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது.
எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல், . . . . [05]
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே.
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல், . . . . [05]
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே.
- பெருந்தேவனார்.
பொருளுரை:
எமது ஊர்முகத்தின் ஒள்ளிய பொய்கைத் துறையருகிலே பருத்த கடவுள் ஏறியிருக்கும் முதிய மரத்தின் மீதிருந்து, உடன் உறை பழகிய தேயா வளைவாய்த் தெளி கண் கூர் உகிர் வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை எம் மருகு ஒருசேர உறைதலானே பழக்கமுற்ற தேயாத வளைந்த வாயையும் தெளிந்த கண்ணையும் கூரிய உகிரையும் உடைய வாயாகிய பறையோசையாலே பிறரை வருத்தாநிற்கும் வலிமை மிக்க கூகையே!; யாம் யாட்டினிறைச்சியுடனே ஆய்ந்தமைத்த நெய்யைக் கலந்த வெள்ளிய சோற்றினை வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு சேரவிட்டு, நின்னை விரும்பி நிரம்பக் கொடாநிற்பேம்; எம்பால் அன்பிற் குறைவு படாத கோட்பாட்டுடனே எம் காதலர் வருதலை விரும்பி யாம் இரவிலே துயில் கொள்ளாது உள்ளம் சுழன்று வைகும் பொழுது; யாவரும் அஞ்சி விழித்துக் கொள்ளும்படியாக நின் கடிய குரலை எடுத்துக் குழறி எம்மை வருத்தாதே கொள்!