நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 082
குறிஞ்சி
தோழியிற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது.
வேய் வனப்புற்ற தோளை நீயே,
என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி!
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின்
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே- . . . . [05]
போகிய நாகப் போக்கு அருங் கவலை,
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண,
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ,
கோள் நாய் கொண்ட கொள்ளைக் . . . . [10]
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே.
பொருளுரை:
யான்கொண்ட காமநோயும் அதனாலாய மெய்யின் தளர்ச்சியும் ஒழியுமாறு முயங்கிக் கிடந்த சிறப்புற்ற மூங்கில் போலும் அழகமைந்த தோளையுடையையாதலின் நல்ல நடையையுடைய கொடிச்சீ!; போகிய நாகப் போக்கு அருங் கவலை உயர்ந்த நாகமரங்களையுடைய செல்லுதற்கரிய கவர்த்த வழியினிடத்திலே; சிறிய கண்ணும் பெரிய சீற்றமுமுடைய ஆண்பன்றி; சேற்றில் உழலுதலானே அச்சேறு பூசப்பெற்ற கரிய முதுகு புழுதி படிந்திருப்ப அப் புழுதியுடனே விளங்கச் சென்று; சுருக்குவார் வைத்த வெறும் பிளப்பில் விழுந்துபட்டதாக; அங்ஙனம் படுதலும் வாரை அழித்து மொய்த்தனவாய்க் கொன்று நாய்கள் பற்றிக் கொண்ட மிகுதிப்பட்ட தசைகளை அவை கொண்டு போகாதபடி; கானவர் சென்று அவற்றை விலக்கிப் பன்றி யிறைச்சியைக் கொணரா நிற்கும்; சிறு குடியின்கண்ணே; முருகவேளைக் கலந்துடன் சென்ற வள்ளிநாச்சியாரைப்போல நீ என்னுடன் வருகின்றனையோ?; நின் வடிவின் ஒளி கண்ணில் வீசுதலானே யான் நின்னை நோக்கலாற்றல் ஆகாதேனாயினேன் அதனால் வேறொன்றனையும் எண்ணாதே கொள்;