நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 079
பாலை
பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின், அறை மிசைத் தாஅம்
ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப்
பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர் . . . . [05]
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?'
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்;
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று-
அம்ம! வாழி, தோழி!-
யாதனின் தவிர்க்குவம், காதலர் செலவே? . . . . [10]
பொருளுரை:
தோழீ வாழி! இதனைக் கேட்பாயாக!; ஈங்கையின் மூடியிருக்கின்ற தேன் துளி மிகத்திரளும் (புதிய) மலர்களானவை; கூரையையுடைய நல்ல மனையின்கணுள்ள குறிய தொடியையுடைய மகளிர் தம் முன்றிலின் மணலிடத்து விளையாடுதற்கிட்ட கழங்குபோலக் கற்பாறையின்மேல் உதிர்ந்து பரவாநிற்கும்; அழகு பொருந்திய மக்கள் இயங்குதற்கு அரிய கவர்த்த நெறியிலே; பிரிந்து போயினீ ரெனினும் இப்பருவத்து வந்து எம்மைக் கூடி முயங்கியுறைய வேண்டியிருக்க; எம்மைக் கூடியிருந்த நீவிர் இப்பொழுது பிரிந்து போதற்கு நினைந்திருப்பதினுங்காட்டில் அரிய கொடுமை பிறிதுமொன்றுண்டோ? என்று நாம் அவர்பாற் சென்று கூறி; நமது விருப்பத்தைச் சொல்லுகிற்போம்; சொல்லாதிருப்பின் அவர் அகலினும் அகன்று போவார்காண்!; அங்ஙனம் அகல்வாராயின் திண்ணமாக என்னுயிருக்கே ஏதம் வந்துற்றது; ஆதலின் நாம் நேரிற் கூறி நிறுத்துவதன்றி நம் காதலருடைய செலவை வேறெத்தகைய சூழ்ச்சியாலே தவிர்க்கிற்போம்? ஆராய்ந்துகாண்!;