நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 078

நெய்தல்


வரைவு மலிந்தது.

கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை, . . . . [05]

நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்;
கேட்டிசின்- வாழி, தோழி!- தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்,
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
வலவன் கோல் உற அறியா, . . . . [10]

உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!
- கீரங்கீரனார்.

பொருளுரை:

தோழீ! வாழி! தௌ¤ந்த கழியின்கண்ணுள்ள நீரிடத்துப் பெருமை வாய்ந்த தேர் உருளின் உள்வாயளவு அமுங்கப் பெறினும் பறவை பறந்து சென்றாற்போன்ற பொன்னாற் செய்யப்பட்ட கலமுதலியவற்றை யுடைய மனஞ்செருக்கிய குதிரை; தேர்ப்பாகன் தன் தாற்றுக்கோலாலே தூண்டப்பட்டறியாத பரவிய கடனீர்ச் சேர்ப்பனது தேரின் மணியொலிக்குங் குரலைக் கேட்பாயாக!; கொல்லுந் தன்மையுள்ள சுறாமீன் இயங்குகின்ற ஒள்ளிய நிறத்தையுடைய பெரிய கழியிடத்து மலர்ந்த நீலமணி போன்ற நெய்தலின் கரியமலர் நிறையுமாறு; புன்னையின் பொன் போன்ற நுண்ணிய தாதுபரக்கும்; வீழூன்றிய அடியையுடைய தாழைமலர் கமழ்கின்ற கடற்கரையிலுள்ள சோலையின்கண்ணே; துன்பம் வந்து மேன்மேல் வருத்துகின்ற ஆதித்த மண்டிலம் மறையும் மாலைப் பொழுதில்; காமநோய் மிகுதலானாகிய மிக்க துன்பத்தினின்றும் நாம் இனி இங்கு உய்ந்து வாழ்துங்காண்!;