நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 076
பாலை
புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது.
வருமழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி,
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ,
வருந்தாது ஏகுமதி- வால் இழைக் குறுமகள்! . . . . [05]
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ,
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே!
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி,
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ,
வருந்தாது ஏகுமதி- வால் இழைக் குறுமகள்! . . . . [05]
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ,
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே!
- அம்மூவனார்.
பொருளுரை:
தூய கலன்களை யணிந்த இளமடந்தாய்!; இந்த மெல்லிய பெரிய பழிச்சொல்லைத் தூற்றுதலையுடைய நினது ஊரின்கண் உள்ள புன்னையின் காம்பிற்ற மலர் மிகுதியாக வுதிர்ந்ததனாலே தேன் மணம் வீசுகின்ற புலவினையுடைய கழிக்கரைச் சோலையின்; மிக்க மணலிலே நடந்து இப்பொழுது கற்கள் பதிதலாலே சிவந்த நின்னுடைய மெல்லிய அடிகள் வருந்தாதிருத்தற்பொருட்டு; வருகின்ற மழை பெய்யாதொழிந்த வெளிய நிறத்தையுடைய விசும்பினின்று விழுகின்ற நுண்ணிய துளிகளும் இல்லையாகிய; காற்றுச் சுழன்று வீசும் அழகிய காட்டு நெறியகத்து ஆலமரத்தின் நிழலிலே தங்கி இளைப்பாறி; அஞ்சுமிடங் காணினும் ஆங்கு அஞ்சாது மற்றும் எவ்வெவ் விடத்தே தங்கவேண்டினும் அவ்வவ்விடத்தே தங்கிச் சிறிதும் வருத்தமுறாமல் ஏகுவாயாக!;