நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 075
குறிஞ்சி
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் தோழி கேட்பச்சொல்லியது.
பூம் பொறிப் பொலிந்த, அழல் உமிழ் அகன் பை,
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது
தகாஅது- வாழியோ, குறுமகள்!- நகாஅது
உரைமதி; உடையும் என் உள்ளம்- சாரல் . . . . [05]
கொடு விற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போல,
சேயரி பரந்த மா இதழ் மழைக் கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
பைதல் நெஞ்சம் உய்யுமாறே. . . . . [10]
பொருளுரை:
இளமகளே, நீ நெடுங்காலம் வாழ்வாயாக!; உன்னிடத்திற் சிறிதும் நன்மை யில்லாமையால் இதுதான் பயன் என்று கருதாமல்; பொலிவு பெற்ற புள்ளிகள் அமைந்த அழல் போன்ற நஞ்சை உமிழ்கின்ற அகன்ற படத்தையுடைய பாம்பு உயிர்களைக் கொல்லும் பொருட்டுக் கடித்து வருத்தினாற்போலும்; ஈங்கு இது தகாஅது இங்கு நகைத்துரைப்பதாகிய இது தகுதியுடையதொன்றன்று சாரல் கொடுவில் கானவன் கோட்டு மா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போலச் சே அரி பரந்த ஆயிழை மழைக் கண் மலைச் சாரலின்கண்ணே வளைந்த வில்லையுடைய வேட்டுவன் கோட்டினையுடைய பன்றியை எய்து கொன்று, அதன் பசிய தசையிற் பாய்ச்சியதனாலே சிவந்த அம்பைப் போலச் செவ்வரி பரந்த ஆராய்ந்த இழையை அணிந்த தலைவியின் குளிர்ச்சியுற்ற கண்களினுடைய; பொருந்தாப் பார்வையுற்ற எனது வருந்திய நெஞ்சம்; உய்யும் வண்ணம் இங்ஙனம் நகை செய்யாது உரைப்பாயாக!; நகைத்துக் கூறின் என் உள்ளம் கலங்காநிற்கும்;