நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 071

பாலை


தலைவனைத் தோழி செலவு அழுங்குவித்தது.

மன்னாப் பொருட் பிணி முன்னி, 'இன்னதை
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து' எனப்
பல் மாண் இரத்திர்ஆயின், 'சென்ம்' என,
விடுநள் ஆதலும் உரியள்; விடினே,
கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று, . . . . [05]

பிரிதல் வல்லிரோ- ஐய! செல்வர்
வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ணப் புறவின் செங் காற் சேவல்
வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல்
நும் இலள் புலம்பக் கேட்டொறும் . . . . [10]

பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே?
- வண்ணப்புறக் கந்தரத்தனார்.

பொருளுரை:

ஐயனே! நிலையில்லாத பொருளைத் தேட ஆசை பிணித்தலானே அதன்கண்ணே கருத்தைச் செலுத்தி இக்காரியத்தை வளையணிந்த முன் கையையுடைய நின் தோழிக்குக் கூறுவாயாக என்று; பல் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என விடுநள் ஆதலும் உரியள். பலவாக மாட்சிமைப்பட இரந்து கூறுகின்றனிராதலால், யான் சென்று கூறின் நீயிர் செல்லுவீராக என்று உம்மை விடுத்தலும் செய்வாள்; அங்ஙனம் அவள் நும்மை விடுப்பினும்; செல்வருடைய பலகட்டுக்கள் அமைந்த வீட்டின்கண்ணே உள் இறப்பிலிருக்கும் அழகிய சிவந்த கால்களையுடைய சேவற்புறா; தான் விரும்பிய பெண்புறாவைப் புணர்ச்சிக்கு அழைக்கும் காமத்தால், செயலறவு கொண்டு ஒலிக்கின்ற அக்குரலோசையை; நும்மைப் பிரிந்து தனிமையாயிருந்து கேட்குந்தோறும்; எம் பொலிவு பெற்ற கூந்தலையுடைய தலைவி பேரவாவால் நடுங்கி வருந்துமாறு; அவளுக்கு முன்பு நின்று நீயிர் அவளுடைய கண்ணையும் நெற்றியையும் தைவந்து பிரிந்து போதற்கு வன்யுடையீரோ? உடையீராயின் சென்று சொல்லுவேன்;