நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 069
முல்லை
வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி சொல்லியது.
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி,
சேய் உயர் பெரு வரைச் சென்று, அவண் மறைய,
பறவை பார்ப்புவயின் அடைய, புறவில்
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ,
முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின் . . . . [05]
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ,
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி,
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி,
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை,
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் . . . . [10]
இனையவாகித் தோன்றின்,
வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே!
சேய் உயர் பெரு வரைச் சென்று, அவண் மறைய,
பறவை பார்ப்புவயின் அடைய, புறவில்
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ,
முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின் . . . . [05]
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ,
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி,
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி,
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை,
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் . . . . [10]
இனையவாகித் தோன்றின்,
வினை வலித்து அமைதல் ஆற்றலர்மன்னே!
- சேகம்பூதனார்.
பொருளுரை:
பல கதிர்களையுடைய ஆதித்த மண்டிலம் பகற்பொழுதைச் செய்து முடித்து மிகவுயர்ந்த பெரிய அத்தமயமலையிற்சென்று அங்கே மறையவும்; பறவைகள் தம் பிள்ளைகளிருக்கும் கூட்டிற் சென்று தங்கியிருப்பவும்; காட்டின் கண்ணே கரிய பிடரியையுடைய கலைமான் இளைமையையுடைய தன் பெண்மானைத் தழுவியிருப்பவும்; முல்லையரும்புகள் மலரவும்; பலவிடங்களிலுள்ள புதர் தோறும் காந்தள் தழைத்துத் தன் மலராகிய விளக்கேந்தி நிற்பவும்; செம்மாப்பையுடைய நல்ல பசுவின் குற்றமற்ற மணியின் தெளிந்த ஓசை வளைந்த கோலையுடைய ஆயர்தங் குழலோசையோடு சேர்ந்து மெல்லிதாக வந்து ஒலியாநிற்கும் அருள் இல்லாத இம்மாலைப் பொழுதானது; பொருளீட்டு முயற்சியால் நம்மைக் கைவிட்டு அகன்ற தலைவர் சென்ற நாட்டிலும் இத்தன்மையாகத் தோன்றுமாயின்; அவர் தாம் ஏறட்டுக் கொண்ட செயலின் கண்ணே உறுதிகொண்டு தங்கியிருப்பாரல்லர்; அப்படி இல்லாமற் கழிகின்றது;