நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 064
குறிஞ்சி
பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது.
அன்னவாக இனையல்- தோழி!- யாம்
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்?
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் . . . . [05]
வறனுற்று ஆர முருக்கி, பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என்
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென,
வறிதால், இகுளை! என் யாக்கை; இனி அவர்
வரினும், நோய் மருந்து அல்லர்; வாராது . . . . [10]
அவணர் ஆகுக, காதலர்! இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே!
பொருளுரை:
தோழீ! நம் காதலர் எவ்வளவு சிறப்புடையராயினும் அவர்பால் தூதுவிடக் கருதுவதனை இனி நீ ஒழிப்பாயாக!; நம்மைக் கைவிட்டாரென்று அத்தன்மையாக வருந்தாதே கொள்!; நாம் இத்தன்மையேமாகி வருந்தும் வண்ணம் நம்மைத் துறந்த அவர் நட்புத்தான் நமக்கு யாது பயன்படும்?; மரற்பட்டையின் நாராலே பின்னிய உடையினையுடைய மலையிலிருக்கிற குறவர் தாம் அறியாமையினாலே மேற்பட்டையை அறுத்த சிறிய இலையையுடைய சந்தன மரத்தில்; வற்றல் தொடங்கி மிகக் கெடுத்து மெல்லென அந்த மரம் வறிதாமாறு அதன்கண் உள்ள நீர் அறுபட்ட வாயின் வழியே சோர்ந்து வடிந்தாற் போல; என் அறிவும் உளமும் அவரிடத்துச் சென்றொழிந்தன வாதலின் இகுளாய்! என் உடம்பு உள்ளில் யாதும் இல்லையாய் நின்றது காண்!; இனி அவர் இங்கு வந்தாலும் என் நோய்க்குரிய மருந்தாகார் ஆதலின்; காதலர் வாராது அங்கேயே உறைவாராக; இங்குக் காமமும் அதனாலுண்டாகிய நினைவும் நம்மை யொறுத்தலாலே வருந்திய நோய் மிக்க ஏதப்பாட்டினை நம் சுற்றத்தார் காணாதொழிவாராக!