நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 061
குறிஞ்சி
தலைவன் வரவு உணர்ந்து, தலைவிக்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது.
கேளாய், எல்ல தோழி! அல்கல்
வேணவா நலிய, வெய்ய உயிரா,
ஏ மான் பிணையின் வருந்தினெனாக,
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,
'துஞ்சாயோ, என் குறுமகள்?' என்றலின், . . . . [05]
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,
'படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல்,
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ?' என்றிசின், யானே. . . . . [10]
வேணவா நலிய, வெய்ய உயிரா,
ஏ மான் பிணையின் வருந்தினெனாக,
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,
'துஞ்சாயோ, என் குறுமகள்?' என்றலின், . . . . [05]
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,
'படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல்,
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ?' என்றிசின், யானே. . . . . [10]
- சிறுமோலிகனார்.
பொருளுரை:
ஏடி தோழீ! யான் கூறுகின்ற இதனைச் கேட்பாயாக! நேற்றிரவில் வேட்கை மிகுதியாலுற்ற ஆசைப்பெருக்கமானது துன்புறுத்தலாலே வெப்பமாகப் பெருமூச்செறிந்து; அம்புபட்ட மான்பிணைபோல வருத்த முற்றேனாக; அப்பொழுது அன்னை யானுற்ற துன்ப மிகுதியை அறிந்தாள் போல என்னை நோக்கி 'என்னிள மகளே! நீ தூங்குவாயல்லையோ என்றலும்; யான் சொல்வது வெளியிலே தெரியாதபடி மெல்ல என் நெஞ்சினுள்ளே; மிக்க மழை பொழிந்த கற்பாறை யருகிலே பூத்த சிச்சிலிப் பறவையின் வாய் போன்ற அரும்புகளையுடைய முல்லையும் பரல்கள் நிரம்பிய பள்ளங்களும் உடைய (விளங்கிய) காடு சூழ்ந்த நாட்டையுடைய தலைமகனைக் கருதியிருப்போர்க்குக் கண்ணுறக்கமும் வாரா நிற்குமோ? என்றேன் காண்;