நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 054

நெய்தல்


காமம் மிக்க கழிபடர்கிளவி.

வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ,
வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து-
கருங் கால் வெண் குருகு!- எனவ கேண்மதி:
பெரும் புலம்பின்றே, சிறு புன் மாலை; . . . . [05]

அது நீ அறியின், அன்புமார் உடையை;
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை
இற்றாங்கு உணர உரைமதி- தழையோர்
கொய்குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணிப் புறம் தைவரும் . . . . [10]

கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே!
- சேந்தங் கண்ணனார்.

பொருளுரை:

கரிய காலையுடைய வெளிய நாராய்! நீ நின் சுற்றம் முதலாயவற்றோடு சென்று வளைந்த நீர்ப்பரப்பிலுள்ள இரையை அருந்தித் தாவிப் பறந்து வருதலை விரும்பினையாயினும், இரும்புலா அருந்தும் தூச் சிறை நின் கிளையொடு சிறிது இருந்து எனவ கேள்மதி மிக்க புலவைத் தின்னுகின்ற தூய சிறகுகளையுடைய நின் சுற்றத்தோடு சிறிது பொழுது ஈண்டுத் தங்கியிருந்து என்னுடைய சொற்களைக் கேட்பாயாக!; சிறிய புல்லிய மாலைப்பொழுதானது எனக்குப் பெரிய வருத்தஞ் செய்தலை உடையதாயிராநின்றது; அதனை நீ அறியின்; என்மாட்டுப் பெரிதும் அன்புடையையாதலால் வேறுபட்ட மனங்கொள்ளாமல்; என்குறை இத்தன்மையதென்று தழை யுடுப்பவர் கொய்தற்குரிய குழை தழைந்த இளைய ஞாழல் தெளிந்த திரையின் புறத்தைத் தடவாநிற்கும் கண்டல் மர வேலிகளையுடைய நுங்கடற்றுறைச் சேர்ப்பனிடஞ் சென்று அவன் உணருமாறு உரைப்பாயாக!