நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 052
பாலை
தலைமகன் செலவு அழுங்கியது.
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி,
வீங்கு உவர்க் கவவின் நீங்கல்செல்லேம்; . . . . [05]
நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே;
அன்பு இலை; வாழி, என் நெஞ்சே! வெம் போர்
மழவர் பெரு மகன் மா வள் ஓரி
கை வளம் இயைவது ஆயினும், . . . . [10]
ஐது ஏகு அம்ம, இயைந்து செய் பொருளே.
பொருளுரை:
எமது நெஞ்சமே! கொடியையுடைய காட்டு மல்லிகைப் பூவுடனே தூய பொற்றகடு போன்ற பாதிரி மலரையும் சேர எதிர் எதிர் வைத்துத் தொடுத்துக் கட்டிய மலர் மாலையைச் சூடிய கூந்தலின்; மணங்கமழும் நாற்றத்தைப் பெற்று, யாம் அவளுடைய சுணங்கமைந்த மார்பிற் கொங்கையை ஒருசேர அணைத்துக்கொண்டு மிக்க இன்சுவையையுடைய இவள் கையால் அணைத்திருத்தலினின்றும் நீங்க மாட்டுகிலேம், நீயே ஆள்வினை சிறப்ப எண்ணிநாளும் பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலை நீ தானும் முயற்சியை மேம்படக் கருதி நாள்தோறும் (எம்மை) இவளைப் பிரிந்து தனித்து உறைகின்ற வாழ்வினை விரும்பிச் சிறிது பொழுதும் ஓய்கின்றனையல்லை; ஆதலின் நீ என்மாட்டு அன்பினையுடையையல்லைமன் இங்ஙனமே நெடுங்காலம் வாழ்வாயாக!; நீ உட்கொண்டு உடன்பட்டு ஈட்டும் பொருள்தான்; வெய்ய போர் செய்ய வல்ல போர்வீரர் தலைவனாகிய சிறந்த கொடையையுடைய ஓரி யென்பவனது கைவண்மைக்குப் பொருந்திய செல்வமே நீ ஈட்டும் பொருளாக நினக்குக் கிடைக்கப் பெறினும் அப்பொருள் இவளது முயக்கத்தினும்காட்டிற் சிறந்ததன்று கண்டாய்!; அது மிக மென்மையுடையதன்றோ அதனால் வேண்டுமெனில் நீயே ஏகுவாய் யாம் வாரகில்லேம்;