நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 051
குறிஞ்சி
ஆற்றாது ஏதம் அஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத்து, சிறைப்புறமாகச்சொல்லியது.
காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்
பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு . . . . [05]
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென,
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே;
பெருந் தண் குளவி குழைத்த பா அடி,
இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு
பேதை ஆசினி ஒசித்த . . . . [10]
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே?
பொருளுரை:
தோழீ! மேகமானது உயர்ந்த அடித்தண்டினையுடைய மூங்கில்கள் நிரம்பிய மலைப்பிளப்பிடமெல்லாம் எதிரொலி யெடுப்ப; பாம்புகள் வருத்தமுற்று உயர்ந்த துறுகல்மீது புரளுமாறு துன்புறுத்தி விரைந்த செலவையுடைய கடிய முழக்கமிக்க இடியேற்றுடனே மிக்க துளியைப் பெய்யத் தொடங்கி அப் பெயலை நிறுத்துகின்றிலது. பெயலொடு மின்னு நிமிர்ந்து அன்னவேலன் வந்தென அத்தகைய பெயலைக் கண்டு ஆற்றது ஏதம் அஞ்சி வேறுபட்ட என்னை உற்றதறியாது நற்றிறம் படர்ந்த அன்னை வெறியெடுத்தலும் அதற்காக மின்னலைச் செய்தமைத்தாற் போன்ற வேலைக் கையிலுடைய படிமத்தான் வந்தானாதலின்; இனிப் பின்னி விடுத்தற்குரிய கொண்டையிற் பூவைக் குலையாது காத்தலும் அரியதாயிரா நின்றது; ஆதலாற் பெரிய குளிர்ச்சியையுடைய பச்சிலை மரத்தை முரித்துழக்கின பரந்த அடிகளையுடைய கரிய சேற்றை யப்பிய நெற்றியையுடைய கொல்ல வல்ல களிற்றியானை; அறியாமையால் ஆசினியை முரித்து மலருதிர்ந்து பரவிய வேங்கை மரத்தின்கீழே தங்காநிற்கும் மலைகிழவோனுக்கு; என்ன செய்ய மாட்டுவேம்; கூறாய்,