நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 050
மருதம்
தோழி பாணற்கு வாயில்மறுத்தது.
குழையன் கோதையன் குறும் பைந் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,
நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின், . . . . [05]
'கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று' என,
'யாணது பசலை' என்றனன்; அதன் எதிர்,
'நாண் இலை, எலுவ!' என்று வந்திசினே-
செறுநரும் விழையும் செம்மலோன் என,
நறு நுதல் அரிவை! போற்றேன், . . . . [10]
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே.
பொருளுரை:
அன்னாய்! நறிய நுதலையுடைய தலைவி! என் அறியாமையாலே நின்னை அஞ்சி; குழை பெய்து மாலைசூடிக் குறிய பசிய தொடியணிந்தவனாகி விழாக் களத்து அவன் துணங்கையாடுதலைக் கையகப்படுப்பேமாகி யாங்கள் செல்லா நிற்கையில், நொதுமலாளன் நெடு நிமிர் தெருவின் கைபுகு கொடு மிடை கதுமெனத் தாக்கலின் நமக்கு அயலானாகிய அவன்தான் அவ்வணிகளையுடையனாய் நெடிய நிமிர்ந்த தெருமுடிந்த வேறொரு வழி வந்து புகுந்த வளைந்த விடத்தே விரைவின் வந்து எதிர்ப்பட்டானாக; இங்ஙனம் செய்யும் நின்னைக் கேட்பார் உண்டோ? இல்லையோ? அறிந்துகொள் என்று யான் கூற; அவனும் அவ்வறியாமையுடையான் போல என்கட்பசலை அழகுடையது என்றனன்; அதனுக் கெதிர்மொழி கொடுத்தற்காக அவன் பகைவராலும் விரும்பப்படும் செம்மாப்புடையான் எனக் கொண்டு; வணங்கிச் செல்லாது, சிறுமை பெருமையின் என் சிறுமை பெரிதாகலான்; ஆராயாதே துணிந்து 'எலுவ நீ நாணுடையை அல்லை" என்று கூறிவந்தேன்;