நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 049

நெய்தல்


தோழி, தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது; சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம்.

படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த்
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே;
முடிவலை முகந்த முடங்கு இறாப் பரவைப்
படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே;
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து, . . . . [05]

எமரும் அல்கினர்; 'ஏமார்ந்தனம்' எனச்
சென்று நாம் அறியின், எவனோ- தோழி!
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும்
தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே? . . . . [10]
- நெய்தல் தத்தனார்.

பொருளுரை:

தோழீ! பரதவர் முனறிலின்கணுள்ள பலர் கூடுகின்ற மன்றம் போல் அமைந்த புன்னையின் கரிய கிளைகளிலுள்ள நறிய மலர் அயலிலுள்ள தாழை மடலோடு கூடி நறுமணம் வீசாநிற்கும் தெளிந்த கடற்றுறைவன; வாழ்கின்ற சிறிய நல்ல ஊரின்கட் சென்று; அவன்பால் கடலிலுள்ள பெரிய அலைகளாலே கொழிக்கப்பட்ட பால் போலும் வெளிய நிறத்தையுடைய எக்கராகிய மணல் மேட்டில் விளையாட்டயரும் வளையுடைக் கையராய பரத்தியர் யாவரும் தத்தம் மனையகத்துத் துயில்கின்றமையாலே துறை தனிமையுடையதாயிராநின்றது; முடியிட்ட வலையால் முகக்கப்பட்ட முடங்குதலையுடைய பாவை போன்ற இறாமீன்களைக் காயவிட்டு அவற்றில் வந்து விழுகின்ற காக்கைகளை ஓப்புதலானே பகற்பொழுது கழிந்துவிட்டது; எம்முடைய ஐயன்மாரும் திரண்ட கோடுகளையுடைய சுறா முதலிய மீன்களைப் பிடித்தலானாகிய உவகையராய்ப் பின்னும் வேட்டைமேற் செல்லாதொழித்துத் தம்தம் மனையகத்தே தங்கிவிட்டனர்காண்; யாமும் நீ இல்லாமையால் மயக்கமுடையேமாய் இராநின்றேம் என்று கூறி அவன் கருத்தை ஆராய்ந்தறியின்; அதனா லேதேனும் குற்றப்பாடுளதோ? உளதாயிற் கூறிக்காண்;