நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 040

மருதம்


தலைமகட்குப் பாங்கு ஆயினார் கேட்பப் பரத்தை சொல்லியது.

நெடு நா ஒள் மணி கடி மனை இரட்ட,
குரை இலைப் போகிய விரவு மணற் பந்தர்,
பெரும்பாண் காவல் பூண்டென, ஒரு சார்,
திருந்துஇழை மகளிர் விரிச்சி நிற்ப,
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப் . . . . [05]

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈர்- இமை பொருந்த,
நள்ளென் கங்குல், கள்வன் போல, . . . . [10]

அகன் துறை ஊரனும் வந்தனன்-
சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே.
- கோண்மா நெடுங்கோட்டனார்.

பொருளுரை:

காவலையுடைய மாளிகையிடத்து நெடிய நாவையுடைய ஒள்ளிய மணி ஒலியா நிற்ப ஒலிக்கின்ற தெங்கங் கீற்றான் மிடைந்து புனைந்த மணல் பரப்பிய பந்தரின்கண்ணே; முன்பு பரத்தையிற் சென்ற வழிப் பெரிய பாணர் தலைவனைச் சூழ்ந்து காவலை மேற்கொண்டாற் போலத் திருந்திய கலனணிந்த மகளிர் இப்பொழுது நன்னிமித்தமாக நிற்ப; நறுமணமிக்க விரிப்பு விரித்த மெல்லிய அணையின்மீது செவிலியுடனே ஈன்ற அணுமை விளங்கிய புதல்வன் துயிலா நிற்ப; வெண்கடுகை யப்பிய எண்ணெய் தேய்த்து ஆடும் நீராட்டினால் ஈரிய அணியையுடைய குளிர்ந்த நெய்பூசிய மிக்க மென்மையாகிய உடம்பினையுடைய அழகு விளங்கிய மனைவிதான்; தன் ஈரிமையும் ஒன்றோடொன்று பொருந்த வுறங்கா நிற்ப; அகன்ற நீர்த்துறையையுடைய வூரனும் சிறந்த தந்தையின்பெயரனாகிய தன் மைந்தன் பிறந்ததனால் இடையாமத் திருளிலே கள்வனைப் போல வந்துற்றான்;