நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 033
பாலை
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது.
முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை,
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து,
கல்லுடைப் படுவில் கலுழி தந்து,
நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில், . . . . [05]
துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை,
இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல்
வல்லுவம்கொல்லோ, மெல்லியல்! நாம்?' என
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி, . . . . [10]
நல் அக வன முலைக் கரை சேர்பு
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே.
பொருளுரை:
எம்பெருமானே! தலைமகள் என்னை நோக்கி மெல்லியால்! மேலைத்திசையிற் செல்லுகின்ற ஆதித்த மண்டிலம் மறைந் தொழிதலாலே பரவிய மாலைப் பொழுதில்; பிளவுபட்ட நீண்ட மலைச்சார்பில் வன்னிலத்தமைந்த சிறு குடியின்கண்; அச்சமிக்கிருக்கும் பொலிவழிந்த பொதியிலில்; கல்லையுடைய குழிகளிலுள்ள கலங்கனீரைக் கொணர்ந்து கொடுத்து; நிறைந்த மழையைக் கண்டறியாத குறைந்த உணவையுடைய இராப் பொழுதிலே; துவர்த்த நிறத்தையுடைய ஆடையையும் செவ்விய அம்புத் தொடையையுமுடைய ஆறலைகள்வர் நெறி நோக்கியிருக்கும் அச்சம் வரும் வழியின்கண்ணே; அவர் செல்லக் கருதுவர் எனின் யாம் மறுக்கவல்லேமோ என்று; வெளியிற் போதாமே விம்மிய சொல்லையுடையளாய் என் முகத்தை நோக்கலும்; அவ்வளவில் அவளுடைய மலர் போன்ற கண்களிலிருந்து; நல்ல மார்பின்கணுள்ள அழகிய முலைமுகட்டில் விழுந்து பரக்கும்படி மல்கிய கண்ணீர் பரந்தன; ஆதலின் நீ வருமளவும் எவ்வாறு ஆற்றியிருக்குந் தன்மையள்?