நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 032

குறிஞ்சி


தலைவிக்குக் குறை நயப்புக் கூறியது.

'மாயோன் அன்ன மால் வரைக்கவாஅன்,
வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி
அம் மலைகிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன்' என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்;
நீயும் கண்டு, நுமரொடும் எண்ணி, . . . . [05]

அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுதரற்கு
அரிய- வாழி, தோழி!- பெரியோர்
நாடி நட்பின் அல்லது,
நட்டு நாடார், தம் ஒட்டியோர் திறத்தே.
- கபிலர்.

பொருளுரை:

தோழீ! வாழி! மாயோனைப் போன்ற பெரிய மலைப்பக்கத்து அவன் கண்ணனாயவதரித்த பொழுது அவனுக்கு முன்னவனாகத் தோன்றிய வெளிய நிறத்தையுடைய பலதேவனைப் போன்ற விளங்கிய வெண்மையான அருவிகளையுடைய; அழகிய மலைக்குரிய தலைவன் நாள்தோறும் நம் புனத்து அயல் வந்து நம்மை விரும்பி வருந்தாநின்றான் என்று கூறுகின்ற எனது ஒப்பற்ற வாய்மொழியைத்
தெரிந்தாயல்லை;
என்னோடு உசாவுவதை யொழித்து நீயும் அவனை நோக்கி நின்மாட்டு அன்புடைய தோழியரோடும் ஆராய்ந்து அறிவினால் இது தக்கது இது தகாததென்பதையும் அறிந்து பின்னர் அளவளாவுதல் வேண்டும்; அவன் கூற்று மறுத்தற்கரியன காண்!; அறிவுடைய சான்றோர் தம்பாலடைந்து நட்புக் கொள்ள விரும்பினார் திறத்து; முன்னர் அவருடைய குணம் செயல்களின் நன்மையை ஆராய்ந்து நட்புக்கொள்ளுவதல்லது நட்புச் செய்து பின்பு ஆராய்ந்து பாரார்; நீ அங்ஙன் ஆராய்ந்து மலைகிழவோனை நட்புக்கொண்டாயல்லை; முன்பு நட்டு இப்பொழுது வெறுத்தல் தகாது கண்டாய்!