நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 030

மருதம்


பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தோழி சொல்லியது.

கண்டனென்- மகிழ்ந!- கண்டு எவன்செய்கோ?-
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்,
ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின்
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர் . . . . [05]

கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி-
கால் ஏமுற்ற பைதரு காலை,
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு,
பலர் கொள் பலகை போல-
வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே . . . . [10]
- கொற்றனார்.

பொருளுரை:

மகிழ்ந! பாணன் கையிடத்ததாகிய பண்பமைந்த சிறிய யாழ் அழகிய வண்டுபோல இம்மென ஒலியாநின்ற நீ எழுந்து வருகின்ற தெருவிலே; நீ வருதலை எதிர்பார்த்து நின்மார்பை முன்பு தமக்குடையராய்ப் பற்றிக்கொண்டிருந்த மாட்சிமைப் பட்ட இழையை யணிந்த பரத்தையர் பலரும்: கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப்பனி நீ பிரிந்ததனாலுண்டாகிய கவற்சி மிகுதலாலே கண்களினின்று வெப்பமாய் வடிகின்ற கண்ணீருடனே; கடிய புயற்காற்று வீசிச் சுழற்றுதலாலே துன்புற்ற காலத்துக் கடலிலே தாம் ஏறியிருக்கும் மரக்கலங் கவிழ்ந்து விட்டதாக, அங்ஙனம் கவிழ்தலும்; கலக்கமுற்றுத் தாமும் ஒருசேர வீழ்ந்து அவ்வழி விழுந்த பலரும் ஆண்டு மிதந்து வந்த ஒரு பலகையைப் பற்றிக்கொண்டு தாம் தாம் தனித்தனி இழுப்பதுபோல; நின் கைகளைப் பற்றி அவரவர் தம் தம் கருத்து முற்றுமாறு இழுத்தலாலே நீ அவரிடைப்பட்டு மிக வருந்துகின்ற நிலைமையை; யான் கண்கூடாகக் கண்டேன், கண்டும் நின்னை யாது செய்யற்பாலேன் காண்? ஆதலின் நீ யாரையும் அறியேனென்றதெவ்வண்ணங் கொல்?