நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 025
குறிஞ்சி
தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது.
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின்
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப்
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம்
வள மலை நாடன் நெருநல் நம்மொடு . . . . [05]
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ,
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது
அல்லல் அன்று அது- காதல் அம் தோழி!-
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி . . . . [10]
கண்டும், கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!
பொருளுரை:
காதலையுடைய தோழி!; அழகிய சங்கின் முதுகில் அரக்கைத் தீற்றினாற்போன்ற சிவந்த வரிபொருந்திய இதழையுடைய நெடுந்தூரம் மணங்கமழும் நறவம்பூவின், நறும்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப்பொன் உரைகல்லின் நல் நிறம் பெறூஉம் வளமலை நாடன் நறிய தாதை யளைந்த வண்டு பசிய நிறமுள்ள பொன்னை யுரைக்கும் கட்டளைக் கற்போல நல்ல நிறத்தைப் பெறாநிற்கும் வளம் பொருந்திய மலைநாடன்; நேற்றைப் பொழுது நம்மோடு கிளைத்தல் மிக்க சிறிய தினையில் வீழுங் கிளிகளைக் கடிந்து அங்குத் தங்கியிருந்தும்; தன்குறையைக் கூறுமிடம் பெறானாகிப் பெயர்ந்து போயினான்; யான் கருதுகின்றது அங்ஙனம் அவன் பெயர்ந்ததாகிய ஓரல்லலுடைமையைக் குறித்ததன்று காண்!; தேனையுண்ணும் வேட்கையாலே நறுமலர் இன்னதென ஆராயாது யாண்டும் போய் விழுகின்ற வண்டின் ஒரு தன்மையை யொத்த அவனது; கெடாத தோற்றப் பொலிவினைக் கண்டு வைத்தும்; கழன்ற தொடியை மீண்டு செறித்த எனது பண்பில்லாத செய்கையைக் கருதா நின்றது என்னுள்ளம்; இஃதென்ன வியப்பு!;