நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 021
முல்லை
வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,
வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்- . . . . [05]
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்
காமரு தகைய கானவாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, . . . . [10]
நாள் இரை கவர மாட்டி, தன்
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே!
பொருளுரை:
பாகனே! விரைந்து செல்லுதலாலே வருந்திய மிக்க செலவினையுடைய நம் வீரர்; அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ வேண்டு அமர் நடையர் மெல்மெல வருக. இடையிற் செறித்த கச்சையின் பிணிப்பை நெகிழ்த்து ஆங்காங்குத் தங்கித் தாம் தாம் விரும்பிய வண்ணம் அமர்ந்த நடையராய் மெல்ல மெல்ல வருவாராக; உருக்கலுற்ற நறிய நெய்யிற் பாலைச் சிதறினாற் போன்ற கடைகின்ற குரலையுடைய மிடற்றினையுடைய அழகிய நுண்ணிய பலவாகிய புள்ளிகளமைந்த கண்டார்க்கு விருப்பம் வரும் தகுதிப்பாட்டினையுடைய கானங்கோழி; மழை பெய்தநீர் வடிந்த அகன்ற நெடிய காட்டிலே சுவறாத ஈரமணலை நன்றாகப் பறித்து; நாட்காலையில் இரையாகிய நாங்கூழைக் கவர்தலும் அதனைக் கொன்று; தன் பெடைக்கு ஊட்ட வேண்டி அப் பெடையை நோக்கிய பெருமை தக்கிருக்கின்ற நிலையை உங்கே பாராய்!; ஆதலின் நாம் முன்னே விரைந்து செல்லுமாறு இதுகாறுந் தீண்டாத கூரிய தாற்றுமுள்ளாலே குதிரையைத் தூண்டித் தேரைச் செலுத்துவாயாக!;