நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 020

மருதம்


பரத்தையிற்பிரிந்து வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைவி சொல்லியது; வாயிலாகப் புக்க தோழிதலைவிக்குச் சொல்லியதூஉம் ஆம்.

ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,
செறிதொடி தௌர்ப்ப வீசி, மறுகில், . . . . [05]

பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,
சென்றனள்- வாழிய, மடந்தை!- நுண் பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்;
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை,
பழம் பிணி வைகிய தோள் இணைக் . . . . [10]

குழைந்த கோதை, கொடி முயங்கலளே.
- ஓரம்போகியார்.

பொருளுரை:

ஐயனே! நின் காதற் பரத்தை நேற்றைப் பொழுதில் அவள் மகிழ்நனாகிய நின்னிடத்துத் தங்கி நின் மார்பிற் கிடந்து உறங்கி; வண்டுகள் பாயப்பெற்ற வெண்கடப்ப மரத்தின்¢விரிந்த பூங்கொத்துக் கமழும் கூந்தல் துளங்கிய துவட்சியோடு சிறுபுறத்து வீழ்ந்து அசையா நிற்ப; இடையிற் கட்டிய உடை சரிந்து அசையாநிற்ப; நெருங்கிய வளைகள் ஒலிக்கும்படி கைகளை வீசிக்கொண்டு; நீலமலர் போன்ற மையுண்ட கண்கள் நிலைபெயர்ந்து சுழலும்படி நோக்கி எமது மறுகின்கட் சென்றனள்; நின்னைப் பிரிதலாலே விளங்கிய பூண்களுடனே நுண்ணிய பலவாய சுணங்கு அணியப் பெற்றவளாய்; முன்பு நின் மார்பினுற்ற முயக்கத்தில் நெரிந்த சோர்கின்ற குழையையும்; நீட்டித்த பிணியுற்ற இரண்டு தோள்களையும்; துவண்ட மாலையையுமுடைய கொடிபோன்று நின் முயக்கம் நீங்கினவளாகி எமது மறுகின்கட் சென்றனள்; அத்தகைய இளம் பிராயத்தளாகிய பரத்தையை யாம் கண்டேம்; அவள் நின்னோடு நீடூழி வாழ்வாளாக;