நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
நற்றிணை: 018
பாலை
பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
வருவர் வாழி- தோழி!- மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,
கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல்
தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை, . . . . [05]
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப,
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன,
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே. . . . . [10]
வருவர் வாழி- தோழி!- மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,
கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல்
தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை, . . . . [05]
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப,
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன,
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே. . . . . [10]
- பொய்கையார்.
பொருளுரை:
தோழீ! நெடுங்காலம் வாழ்வாயாக!; மூவனென்பவனைப் போரில் வென்று அவனது நிரம்பிய வலியையுடைய முட்போன்ற பற்களைப் பிடுங்கிக் கொணர்ந்துவைத் திழைத்த வாயிற் கதவினையுடைய கடற்கரைச் சோலையையுடைய தொண்டி நகரின் தலைவனாகிய; வெல்லும் வேற்படையையுடைய பகைவராற் கடத்தற்கரிய சேனையையுடைய சேரலன்கணைக்காலிரும் பொறையானது; பாசறையின் கண்ணேயுள்ள நெஞ்சு நடுங்குகையாலே கண்ணுறங்காத வீரர் யாவரும்; அலையோய்ந்த கடல்போல இனி தாகக் கண்ணுறங்குமாறு; மதநீரொழிந்த சினந்தணிந்த யானையின் பெரிதாய் நிலைத்துள்ள ஒரு மருப்புப்போன்ற; ஒன்றாகி விளங்கிய அருவியையுடைய மலைநெறியிற் சென்ற தலைவர்; நீ வருத்தமுற்ற வுள்ளத்தோடு கொண்ட பலவாகிய கவலையும் நீங்க விரைவில் வருவர் காண்;