நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

நற்றிணை: 014

பாலை


இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.

தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,
நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்;
நட்டனர், வாழி!- தோழி!- குட்டுவன்
அகப்பா அழிய நூறி, செம்பியன்
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது . . . .[05]

அலர் எழச் சென்றனர் ஆயினும்- மலர் கவிழ்ந்து
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,
இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென,
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்
நெடு வரை விடரகத்து இயம்பும் . . . .[10]

கடு மான் புல்லிய காடு இறந்தோரே.
- மாமூலனார்.

பொருளுரை:

தோழீ! மலர் தலைகவிழ்ந்து பெரிய இதழ் விரிந்த காந்தளையுடைய சாரலின் கண்ணே; தொங்குகின்ற வாயையுடைய களிற்றியானை பெரும் பாம்பின்வாய்ப் பட்டதாக; சோராத துயரோடு அஞ்சுகின்ற பிடியானை பிளிறும் பேரொலியானது; நீண்ட மலையிடத்துள்ள விடரகத்தே சென்று எதிரொலி யெடாநிற்குங் கடிய குதிரையையுடைய கள்வர் கோமான். "புல்லி" என்பவனுடைய வேங்கட மலையிலுள்ள காட்டின்கண்ணே சென்ற நங் காதலர்; என் தோளின் அழகு கெட்டு வாடிப் பழைய நலனெல்லாந் தொலையுமாறு என்னைக் கூடி இன்பங் கொடாராய்க் கைவிட்டொழிந்தாரெனக் கூறாநின்றனை!; அங்ஙனம் கைவிட்டொழிந்தாராயினும்; அவர் சேரலனது கழுமலத்தின் மதில் ஒருங்கழிய இடித்தொழித்துக் கிள்ளிவளவன் அற்றைப் பகலே அவ்வூரைத் தீயின்வாய்ப் பெய்த போரினுங்காட்டில்; மிகப் பெரிதாகிய பழிச்சொல்லுண்டாம்படி சென்றனரெனினும்; என்பால் மிக்க நட்பு வைத்தனர்; ஆதலால், குறித்த பருவத்து வந்து தலையளி செய்வர், ஆதலின் அவர் நீடு வாழ்வாராக!;