மலைபடுகடாம்

சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.

திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்

பொருநராற்றுப்படை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

சிறுபாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

பெரும்பாணாற்றுப்படை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

முல்லைப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

மதுரைக்காஞ்சி

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

நெடுநல்வாடை

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

குறிஞ்சிப்பாட்டு

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

பட்டினப்பாலை

பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

மலைபடுகடாம்


பேரியாழின் இயல்பு

பாடல் வரிகள்:- 019 - 037

அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது
இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி . . . .[20]

தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா
குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின்
அரலை தீர உரீஇ வரகின்
குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ . . . .[25]

சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து
புதுவது போர்த்த பொன் போல் பச்சை
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் . . . .[30]

மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப
அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடு பட கவைஇய சென்று வாங்கு உந்தி
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை . . . .[35]

களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் . . . .[19 - 37]

பொருளுரை:

அருப்பம் என்பது மக்கள் செல்லாத அருகிய இடங்கள். பாண! அருப்பத்தில் நீங்கள் செல்லக் கூடாது. மக்களின் கால்தடம் பதிந்த இயவு வழிகளிலேயே செல்ல வேண்டும். பேரியாழின் உறுப்புக்கள் திவவு - முறுக்கிய வளையல்போல் இருக்கும். கேள்வியாழ் - கடியப்படும் பகை நரம்புகளில் விரல் போகாமல் இசைத்துப் பழக்கப்பட்டது. நரம்பு - செம்மையாக முறுக்கப்பட்டுள்ளதால் குரலின் ஒலிபோல் இனிமையாக ஒலிக்கும். அரலை - அரற்றும் ஒலி தராதது. துளை - நரம்பு கோத்திருக்கும் துளை. இது வரகு அரிசி போல் இருக்கும். பத்தல் - இங்கிருந்துதான் மலையின் எதிரொலி போல் யாழின் மிழலை எதிரொலிக்கும். ஆணி - புதிய வெண்ணரம்புகள் ஆணியில் கட்டித் துளையில் முடுக்கப்பட்டிருக்கும். பச்சை - பத்தலுக்குத் தீட்டப்பட்ட இலை வண்ணம். உந்தி - மணம் கமழும் கூந்தல் இரு பிளவாய் மார்பில் விழும். மடந்தையின் கொப்புளில் அழகுடன் மயிர் ஒழுகியிருப்பது போன்ற வரைவுகளுடன் இரு பிளவாய்க் கிடக்கும் யாழின் வயிறு. மாமை - காதல் பருவத்தில் பெண்கள் மேனியில் தோன்றும் பொன் நிறம். இது பொன்னை அரத்தால் அராவும்போது உதிர்ந்த துகள்போல் அழகு தரும் நீர்மை பட்டுக் கிடக்கும். யாழிலும் இப்படிப்பட்ட அழகமைப்பு தீட்டப்பட்டிருந்தது. உரு - களாப்பழம் போன்ற கருமையால் பளபளக்கும் பாங்கினைக் கொண்டிருந்தது. பெண்ணின் இந்தப் பளபளப்புப் பொலிவை யாழும் கொண்டிருந்தது. அது பேரியாழ். பேரியாழ் வளைந்து நிமிர்ந்த கொம்பு போன்றது. யாழிசை: சீறியாழின் இசை - இன்பத்தில் தோய்த்துக் கேட்போரை மயக்கும். பேரியாழின் உயிர்ப்பிசை எழுச்சியூட்டும்.