சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை

நல்லியக்கோடன் அளிக்கும் பரிசுப் பொருட்கள்
பாடல் வரிகள்:- 246 - 261
விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி,
நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின்,
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு
விறல்வேன் மன்னர் மன்னெயின் முருக்கி
நயவர் பாணர் புன்கண் டீர்த்தபின்
வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு
பொருளுரை:
வலிமையுடைய வெற்றியுடன், பகைவரை அவர்களுடைய நிலத்திலிருந்து அகற்றி, வெற்றியை உடைய மன்னர்களின் அரண்களை அழித்து, அங்குக் கிடைத்த பொருளால் தன்னிடம் விரும்பி வருபவர்களுக்கும் பாணர்களுக்கும் உதவி, அவர்களுடைய துன்பத்தைத் தீர்த்த பின்னர், தன்னுடைய படை மறவர்கள் கொண்டுவந்து தந்த மிகுந்த பொருட்களுடன்,
சொற்பொருள்:
திறல் சால் வென்றியொடு - வலிமையுடைய வெற்றியுடன், தெவ்வுப் புலம் அகற்றி - பகைவரை அவர்களுடைய நிலத்திலிருந்து அகற்றி, விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி - வெற்றியை உடைய மன்னர்களின் அரண்களை அழித்து, நயவர் பாணர் - தன்னிடம் விரும்பி வருபவர்களுக்கும் பாணர்களுக்கும், புன்கண் தீர்த்த பின் - துன்பத்தைத் தீர்த்த பின்னர், வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு - தன்னுடைய படை மறவர்கள் கொண்டுவந்து தந்த மிகுந்த பொருட்களுடன்
உருவ வான் மதி ஊர் கொண்டாங்கு,
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
ஆரம் சூழ்ந்த அயில்வாய் நேமியொடு,
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ்சினைத்
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல, . . . .[255]
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை,
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி,
ஊர்ந்து பெயர் பெற்ற எழி நடைப் பாகரொடு
யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக்
கூருளி பொருத வடுவாழ் நோன்குறட்
டாரஞ் சூழ்ந்த வயில்வாய் நேமியொடு
சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத்
ததர்பிணி யவிழ்ந்த தோற்றம் போல . . . .[255]
வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக்
கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி
யூர்ந்துபெயர் பெற்ற வெழினடைப் பாகரொடு
பொருளுரை:
தேர் ஒன்றையும் கொடுப்பான். கூதிர்கால வானில் பால்போலும் ஒளியைப் பரப்பி ஊர்ந்துச் செல்லும் வடிவான திங்களைப் போல் தோன்றும், கூரிய உளியினால் ஆழ்ந்து செதுக்கின வலிமையான நடுப்பகுதியில் இருந்து (குடத்தில் இருந்து) பிரிந்த ஆர்களை சூழ்ந்த இரும்பு விளிம்பை உடைய உருளைகளுடன் (சக்கரங்களுடன்), சிந்துகின்ற அரும்பினுடைய முருக்க மரத்தின் உயர்ந்து ஓங்கி வளர்ந்த கிளைகளில் உள்ள சிவப்பு நிற பூங்கொத்துக்கள் முறுக்கு நெகிழ்ந்த தோற்றம் போல, உள்ளே உருக்கப்பட்ட செவ்வரக்கு வைத்து செய்த மேல் பலகையினையும் உடைய (கூரையினையும் உடைய), வலிய தொழிலைப் புரியும் தச்சரின் கைத்தொழில் முற்றுப் பெற்ற பின்னர் ஓட்டம் உண்டு என்ற நல்ல பெயர்பெற்ற அழகிய நடையுடைய அத்தேருடன்,
குறிப்பு:
பாகரொடு (258) - நச்சினார்க்கினியர் உரை - பாகருடைய தேரைப் பாகரென்றார் ஆகுபெயரால், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை - தேரோடு, பாகர் என்பது மரத்தினால் இயன்ற தேரின் சுற்றுச் சுவர். அயில்வாய் (253) - நச்சினார்க்கினியர் உரை - கூரிய வாய், சூட்டிற்கு ஆகுபெயர்.
சொற்பொருள்:
பருவ வானத்துப் பால் கதிர் பரப்பி உருவ வான் மதி ஊர் கொண்டாங்கு - கூதிர்கால வானில் பால்போலும் ஒளியைப் பரப்பி வடிவான திங்கள் ஊர்ந்து கொண்டாற்போல் தோன்றும், கூர் உளி பொருத வடு ஆழ் - கூரிய உளியினால் ஆழ்ந்து செதுக்கின, நோன் குறட்டு - வலிமையான சக்கரத்தின் குடத்தில், வலிமையான சக்கரத்தின் நடுப்பகுதியில், ஆரம் - சக்கரத்தின் குடத்தையும் விளிம்பையும் இணைக்கும் மரக்கட்டைகள், சூழ்ந்த - சூழ்ந்த, அயில்வாய் - சக்கரத்தைச் சுற்றியுள்ள இரும்பு விளிம்பு, நேமியொடு - உருளையுடன், சக்கரத்துடன், சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடுஞ்சினை ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல - சிந்துகின்ற அரும்பினுடைய முருக்க மரத்தின் உயர்ந்து ஓங்கி வளர்ந்த கிளைகளில் உள்ள பூங்கொத்துக்கள் முறுக்கு நெகிழ்ந்த தோற்றம் போல, உள் அரக்கு எறிந்த உருக்கு உறு போர்வை - உள்ளே உருக்கப்பட்ட செவ்வரக்கு வைத்து செய்த மேல் பலகையினையும், கருந்தொழில் வினைஞர் கைவினை முற்றி - வலிய தொழிலைப் புரியும் தச்சரின் கைத்தொழில் முற்றுப் பெற்ற பின்னர், ஊர்ந்து பெயர் பெற்று எழில் நடைப் பாகரொடு - ஓட்டம் உண்டு என்று என்று பெயர்பெற்ற அழகிய நடையுடைய தேருடன் (பாகர் - தேர், ஆகு பெயர்)
வாள் முகப் பாண்டில் வலவனொடு தரீஇ . . . .[260]
அன்றே விடுக்குமவன் பரிசில் . . . .[246 - 261]
வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ . . . .[260]
யன்றே விடுக்குமவன் பரிசின் மென்றோட்
பொருளுரை:
குதிரையின் ஓட்டத்தைப் பின் நிறுத்தும் வலிமையுடைய கால்களையும் ஒளியுடைய முகத்தையுடைய எருதையும், அதனைச் செலுத்தும் பாகனுடன் தருவான். அன்றே உங்களுக்கு அவன் பரிசிலைத் தருவான்.
சொற்பொருள்:
மா செலவு ஒழிக்கும் நோன் தாள் வாள் முகப் பாண்டில் வலவனொடு தரீஇ - குதிரையின் ஓட்டத்தைப் பின் நிறுத்தும் வலிமையுடைய கால்களையும் ஒளியுடைய முகத்தையுடைய எருதையும் அதனைச் செலுத்தும் பாகனுடன் தருவான் (தரீஇ - சொல்லிசை அளபெடை), அன்றே விடுக்கும் அவன் பரிசில் - அன்றே பரிசிலைத் தருவான் அவன்