சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை

மன்னன் இரவலரை உபசரிக்கும் பாங்கு
பாடல் வரிகள்:- 235 - 245
காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ,
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி,
கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன் முன்
பனி வரை மார்பன் பயந்த நுண் பொருள் . . . .[240]
பனுவலின், வழாஅப் பல் வேறு அடிசில்
காம்புசொலித் தன்ன வறுவை யுடீஇப்
பாம்புவெகுண் டன்ன தேற னல்கிக்
காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் றன்முன்
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருட் . . . .[240]
பனுவலின் வழாஅப் பல்வே றடிசில்
பொருளுரை:
மாசு இல்லாத மூங்கிலின் தோலை உரித்தாற்போன்ற ஆடையை உடுக்கச் செய்து, பாம்பு சினந்து எழுந்தது போன்ற எழுச்சியைத் தரும் கள்ளைக் கொடுத்து, நெருப்புக் கடவுள் வேண்டியதால் காண்டவம் என்ற காட்டினை எரித்த அம்பையுடைய அம்புறாத்தூணியையும் பூக்கள் வரைந்த கச்சையை அணிந்த அருச்சுனனின் அண்ணனாகிய, பனியுடைய இமயத்தைப் போன்ற மார்பையுடைய வீமசேனன், எழுதிய நுண்மையான சமையல் குறிப்புகளுடைய நூலினின்றும் வழுவாது, பல்வேறு உணவு வகைகளை,
குறிப்பு:
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி (236) - நச்சினார்க்கினியர் உரை - பாம்பேறி மயக்கினாற்போல மயக்கின கட் தெளிவைத் தந்து, பொ. வே. சோமசுந்தரனார் உரை - பாம்பினது நஞ்சேறி மயக்கினாற்போன்று மயக்கும் கள்ளினது தெளிவைப் பருகும்படி தந்து, ச. வே. சுப்பிரமணியன் - பாம்பு சினந்து எழுந்தது போன்று எழுச்சியைத் தரும் கள் தெளிவைத் தருவான்.
சொற்பொருள்:
மாசு இல் காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ - மாசு இல்லாத மூங்கிலின் தோலை உரித்தாற்போன்ற ஆடையை உடுக்கச் செய்து (உடீஇ - சொல்லிசை அளபெடை), பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி - பாம்பு சினந்து எழுந்தது போன்ற எழுச்சியைத் தரும் கள்ளைக் கொடுத்து, கா எரியூட்டிய கணைத் தூணி - நெருப்புக் கடவுள் வேண்டியதால் காண்டவம் என்ற காட்டினை எரித்த அம்பையுடைய அம்புறாத்தூணி, பூவிரி கச்சைப் புகழோன் தன்முன் - பூக்கள் வரைந்த கச்சையை அணிந்த அருச்சுனனின் அண்ணன், பனி வரை மார்பன் - பனியுடைய இமயத்தைப் போன்ற மார்பையுடைய வீமசேனன், பயந்த - கொடுத்த, நுண் பொருள் பனுவலின் வழாஅ - நுண்மையான சமையல் மரபுடைய நூலினின்றும் வழுவாது (வழாஅ - இசை நிறை அளபெடை), பல்வேறு அடிசில் - பல்வேறு உணவு வகைகளை
இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து,
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி . . . .[235 - 245]
விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து
விளங்குபொற் கலத்தில் விரும்புவன பேணி
யானா விருப்பிற் றானின் றூட்டித் . . . .[245]
பொருளுரை:
ஒளியுடைய நீலவானத்தில் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர்களையுடைய கதிரவனை இகழும் தோற்றமுடைய விளங்கும் பொற்கலங்களில், நீ விரும்பி உண்ணுபவற்றைத் தானும் விரும்பி மனதில் கொண்டு, நும் மீது மிகுகின்ற விருப்பத்தால் தானே நின்று நும்மை உண்ணச் செய்து,
சொற்பொருள்:
வாள் நிற விசும்பு கோள்மீன் சூழ்ந்த - ஒளியுடைய நீலவானத்தில் கோள்மீன் சூழ்ந்த, இளங்கதிர் ஞாயிறு - இளங்கதிர்களையுடைய கதிரவன், எள்ளும் தோற்றத்து - இகழும் தோற்றமுடைய, விளங்கு பொற்கலத்தில் - விளங்கும் பொற்கலங்களில், விரும்புவன பேணி - நீ விரும்பி உண்ணுபவற்றைத் தானும் விரும்பி மனதில் கொண்டு, ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி - நும் மீது மிகுகின்ற விருப்பத்தால் தானே நின்று நும்மை உண்ணச் செய்து