சிறுபாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
பொருநராற்றுப்படை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நெடுநல்வாடை
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
மதுரைக்காஞ்சி
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டில் முதலாவது இந்நூல். இது புலவராற்றுப் படையெனவும், முருகெனவும் வழங்கப்பெறும். இது 317 அடிகளையுடைய ஆசிரியப்பாவால் அமைந்தது. இந் நூலை இயற்றியவர்
பெரும்பாணாற்றுப்படை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
முல்லைப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
குறிஞ்சிப்பாட்டு
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
பட்டினப்பாலை
பத்துப் பாட்டுக்களில் ஒன்பதாவது பட்டினப்பாலை, சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
சிறுபாணாற்றுப்படை

நல்லியக்கோடன் முன்னிலையில் யாழ் வாசிக்கும் முறைமை
பாடல் வரிகள்:- 221 - 230
அம் கோடு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின்,
மணி நிரைத்தன்ன வனப்பின் வாய் அமைத்து,
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து,
கானக் குமிழின் கனி நிறம் கடுப்ப, . . . .[225]
புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு, தேம் பெய்து,
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்,
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக்
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக,
நூல் நெறி மரபின், பண்ணி ஆனாது . . . .[221 - 230]
வங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின்
மணிநிரைத் தன்ன வனப்பின் வாயமைத்து
வயிறுசேர் பொழுகிய வகையமை யகளத்துக்
கானக் குமிழின் கனிநிறங் கடுப்பப் . . . .[225]
புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்
தமிழ்துபொதிந் திலிற்று மடங்குபுரி நரம்பிற்
பாடுதுறை முற்றிய பயன்றெரி கேள்விக்
கூடுகொள் ளின்னியங் குரல்குர லாக
நூனெறி மரபிற் பண்ணி யானாது . . . .[230]
பொருளுரை:
பச்சைக் கண்களையுடைய குரங்கு, பாம்பின் தலையைப் பிடித்தபொழுது அப்பாம்பு குரங்கின் கையை இறுக்கியும் நெகிழ்த்தும் பிடிக்கும். அதுபோல் யாழின் அழகிய தண்டில் அமைக்கப்பட்ட வார்க்கட்டு நெகிழ வேண்டியபொழுது நெகிழ்ந்து இறுக வேண்டியபொழுது இறுகியும் இருந்தது. இரண்டு விளிம்பும் சேர்த்து இணைத்த இடத்தில் உள்ள ஆணிகள் மணியை அடுக்கி வைத்தாற்போல் அழகாக இருந்தன. வயிறு சேர்ந்த ஒழுங்கான தொழில் வகை அமைந்த பத்தரினையும் (உடல் பகுதியையும்), காட்டில் உள்ள குமிழ மரத்தின் கனி நிறத்தை ஒத்த தோல் போர்வையுடனும், தேனைப் பெய்து அமிழ்தத்தைத் தன்னிடத்தில் பொதிந்து துளிக்கும் நரம்பினையும் கொண்டது அந்த யாழ். பாடும் துறைகள் யாவும் பாடுதற்கு அமைந்த பயன் விளங்குகின்ற கூடுதல் இசையைக் கொண்டது அந்த இனிய யாழ். இசை நூல்கள் கூறுவதைப் போல் செம்மையாக ஆக்கி அவனைக் குறையாது நீவிர் பாடுவீராக.
குறிப்பு:
பாடு துறை முற்றிய (228) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - நீவிர் பாடும் துறைகள் எல்லாம் முடியப் பாடுதற்கு. முற்றிய - செய்யிய என்னும் வினையெச்சம்.
சொற்பொருள்:
பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன - பச்சைக் கண்களையுடைய குரங்கு பாம்பின் தலையைப் பிடித்தபொழுது அப்பாம்பு குரங்கின் கையை இறுக்கியும் நெகிழ்த்தும் பிடிக்கும், அம் கோடு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின் - அழகிய தண்டினையுடைய நெருங்கச் சுற்றின நெகிழ வேண்டியபொழுது நெகிழ்ந்து இறுக வேண்டியபொழுது இறுகியும், மணி நிரைத்தன்ன, வனப்பின் வாய் அமைத்து - இரண்டு விளிம்பும் சேர்த்து இணைத்த இடத்தில் உள்ள ஆணிகள் மணியை நிரைத்து வைத்தாற்போல் அழகாகப் பொருந்தச் செய்து, வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து - வயிறு சேர்ந்த ஒழுங்கான தொழில் வகை அமைந்த பத்தரினையும் (யாழின் உடல் பகுதியையும்), கானக்குமிழின் கனி நிறம் கடுப்ப புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு - காட்டில் உள்ள குமிழ மரத்தின் கனி நிறத்தை ஒத்த தோல் போர்வையுடன் (கடுப்ப - உவம உருபு), , தேம் பெய்து அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்குபுரி நரம்பின் - தேனைப் பெய்து அமிழ்தத்தைத் தன்னிடத்தில் பொதிந்து துளிக்கும் நரம்பினையுடைய (தேம் - தேன் என்றதன் திரிபு), பாடு துறை முற்றிய - பாடும் துறைகள் முடியப் பாடுதற்கு, பயன் தெரி கேள்விக் கூடு கொள் இன் இயம் - பயன் விளங்குகின்ற இசையைக் கூடுதல் கொண்ட இனிய யாழை, குரல் குரல் ஆக நூல் நெறி மரபின் பண்ணி - இசை நூல்கள் கூறுவதைப் போல் செம்மையாக ஆக்கி, ஆனாது - விடாது